50,000 நாணயங்களால் நகரத்தைக் கட்டிய சீன இளைஞர்
Subscribe to Oneindia Tamil
சிங்கிங்: சீனாவில் சிங்கிங் நகரைச் சேர்ந்த ஹீபெய்க்ஸி என்பவர் தான் வாழும் நகரின் மாதிரியை நாணயங்களை கொண்டு வடிவமைத்துள்ளார்.
1980ம் ஆண்டு பிறந்த இவர் நாணய சேகரிப்பாளர். பலதரப்பட்ட நாணயங்களை சேகரித்து வைத்துள்ள இவர் தற்போது சீனாவில் தான் வாழும் சிங்கிங் நகரின் மாதிரியை நாணயங்களால் வடிமைத்துள்ளார்.

தினமும் 2 மணி நேரம் செலவிட்டு 30 நாட்களில் 50 ஆயிரம் நாணயங்களை கொண்டு நகரின் வர்த்தக கட்டிடங்கள், வீதிகள், பாலங்கள் மற்றும் பூங்காக்களை வடிவமைத்துள்ளார்.
விதவிதமான நாணங்களை பிற நாணய சேகரிப்பாளர்களிடம் இருந்து பெற்று இந்த நகரின் மாதிரியை உருவாக்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications