இஸ்ரேலை மேப்பிலிருந்து நீக்கிய சீன நிறுவனங்கள்! பின்னால் இருக்கும் காரணம் இதுதானா?
பெங்ஜிங்: சீனாவின் பிரபல மற்றும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான பைடு, அலிபாபா போன்றவை தங்களின் இணைய வரைபடத்திலிருந்து இஸ்ரேலின் பெயரை நீக்கியுள்ளன.

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் எழுவது இயல்பானதுதான். இப்படி இருக்கையில் 2011க்கு பின்னர் எந்த மோதல் போக்கும் எழவில்லை. ஆனால் கடந்த 7ம் தேதி யாரும் எதிர்பாராத விதமாக ஹமாஸ் படையினர் காசாவிலிருந்து இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலுக்கு இப்படியான அச்சுறுத்தல் இருப்பது ஏற்கெனவே தெரியும். எனவே அது தனது பாதுகாப்புக்காக 'அயன் டோம்' அமைப்பை உருவாக்கி வைத்திருந்தது. சோகம் என்னவெனில் இந்த வலுவான தடுப்பையும் மீறி ஹமாஸ் ஏவிய ராக்கெட்கள் இஸ்ரேலுக்குள் பாய்ந்தது. இதில் 1,400 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கான பதில் தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்புப்படை தொடங்கியுள்ளது. ஹமாஸை அழிப்பதாக கூறி கடந்த 24 நாட்களாக இஸ்ரேல் விமானப்படை கடுமையான தாக்குதலை தொடுத்து வந்தது. 25வது நாளாக இன்றும் இது நீடிக்கிறது. இந்த கொடூர தாக்குதலில் 8,306 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த 26ம் தேதி வரை வான் வழி தாக்குதலில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் அதன் பின்னர் தரைவழி ஊடுருவலை தொடங்கியது. போர் தீவிரமடைந்த நிலையில் சமாதான பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின.
போர் நிறுத்தம் குறித்து ஏற்கெனவே ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானங்கள் அனைத்தையும், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டது. போர் விஷயத்தை பொறுத்த அளவில் ரஷ்யாவும், சீனாவும் ஒரே கோட்டில்தான் பயணித்து வருகிறது. ரஷ்யாவின் ஒவ்வொரு ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்திற்கும் சீனா ஆதரவளித்து வருகிறது. அதேபோல ஹமாஸுக்கு எதிராக தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்று கூறிய சீன அதிபர் ஜி ஜின்பிங், போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் பாலஸ்தீன பிரச்சினைக்கு கூடிய விரைவில் ஒரு விரிவான, நியாயமான மற்றும் நீடித்த தீர்வுக்கு எகிப்து மற்றும் அரபு நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க சீனா முன்வந்தது. சர்வதேச சமூகம் ஒரு கூட்டுப் படையை உருவாக்கி பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான ஆதரவை வழங்க வேண்டும் என சீனாவின் மத்திய கிழக்கு தூதர் ஜாய் ஜுன் கூறியிருந்தார். இப்படி இருக்கையில் சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் சில தங்களின் இணைய வரைபடத்திலிருந்து இஸ்ரேலின் பெயரை நீக்கியுள்ளன.

சீனாவில் கூகுள் மேப் எல்லாம் எடுபடாது. அங்கு 'பைடு' ஆப்தான் எல்லாம். நம்மூரில் கூகுளை போல பைடு சீனாவில் அனைத்து இணைய சேவைகளையும் வழங்கி வருகிறது. இப்படி இருக்கையில், இந்த நிறுவனத்தின் மேப்பில் இஸ்ரேலின் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையேயுள்ள எல்லையை இந்த மேப் தெளிவாக காட்டுகிறது. ஆனால் இஸ்ரேல் எனும் பெயரை மட்டும் காணோம். அதேபோல சீனாவின் மிகப்பெரிய மல்டி மில்லியனர் நிறுவனமான அலிபாபாவின் இணைய வரைபடத்திலும் இஸ்ரேலின் பெயர் இல்லை. இது குறித்து இரண்டு நிறுவனங்களும் தற்போது வரை அதிகாரப்பூர்வ விளக்கமளிக்கவில்லை.

அலிபாபாவின் வரைபடத்தில், 'லக்சம்பர்க்' போன்ற சிறிய நாடுகள் கூட தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளன. ஆனால் இஸ்ரேல் இல்லை. ஏற்கெனவே இஸ்ரேலை ஐக்கிய அரபு அமீரகம் தவிர ஒரேயொரு அரபு நாடுகள் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படி இருக்கையில் சீன நிறுவனங்களும் தங்களது மேப்பிலிருந்து இஸ்ரேலை காலி செய்திருப்பது பெரும் விவாதமாக எழுந்திருக்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications