டேபிளில் 71 கோடி ரூபாயை போட்டு.. முடிஞ்ச அளவுக்கு ஊழியர்களை அள்ளிக்க சொன்ன சீன கம்பெனி
பீஜிங்: சீனாவில ஹெநான் மைன் கிரேன் கம்பெனி ( Henan Mine Crane Co. Ltd) வருஷாந்திர போனஸ எப்படி குடுக்கறதுன்னு புதுசா ஒரு ஐடியா பண்ணி அசத்தியுள்ளார்கள். இந்த விஷயத்தை கேட்டால் பலர் ஆச்சரியப்படலாம், சிலருக்கு வயிற்றெரிச்சலும் வரலாம். ஜெலுசில் பாட்டிலோட படிக்க ஆரம்பிக்கலாமா..
ஜனவரி 25 அன்னிக்கு அந்த கம்பெனி மீட்டிங்ல, ஊழியர்களுக்கு ஒரு சான்ஸ் குடுத்தாங்கலாம். பணத்தை டேபிளில் வைப்போம். 15 நிமிஷத்துல எவ்வளவு பணம் வேணாலும் எடுத்துக்கலாம்! ஆனா, தப்பா எண்ணிட்டா, போனஸ்ல இருந்து கழிப்பாங்கன்னு சொல்லிட்டாங்க!

கம்பெனியிலுள்ள 70 மீட்டர் நீள மேசையில 40 மில்லியன் யுவான் (நம்ம ஊர் மதிப்பில் 47 கோடி ரூபா!) வைத்தார்கள். ஊழியர்கள் போட்டி போட்டுக்கிட்டு பணத்த அள்ள ஆரம்பிச்சுட்டாங்க! ஒருவர் அதில், 100,000 யுவான் (11 லட்சம் ரூபாய்) எண்ணி கரெக்டா சொல்லிவிட்டாராம்! இதையடுத்து கம்பெனி உரிமையாளர் 60 மில்லியன் யுவான் மதிப்புக்கு போனசை உயர்த்திவிட்டார். நம்மூர் மதிப்புக்கு அது 71 கோடி ரூபாயாகும்.
இந்த வீடியோ இப்ப சோஷியல் மீடியால பயங்கரமா வைரலாகுது! 'mothershipsg' இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட வீடியோவை 1.1 மில்லியன் பேர் பார்த்துள்ளார்கள்! அந்த கமெண்ட்ல பலரும் கலாய்க்குறாங்க! ஒரு நெட்டிசன், "எங்க கம்பெனிலயும் இப்படித்தான் கொடுப்பாங்க, ஆனா பணத்துக்கு பதிலா வேலைய கொடுப்பாங்க!"ன்னு சொல்ல பலரும் ஸ்மைலி போட்டு மனக்குறையை தீர்த்துள்ளார்கள்.
அதேநேரம், ஒரு நெட்டிசன் மாறுபட்ட கருத்தை வைத்துள்ளார்."இந்த சர்க்கஸ் செயலுக்கு பதிலாக நீங்கள் தொழிலாளர்களின் கணக்குகளில் பணத்தை வரவு வைத்திருக்கலாம். இப்படி பணத்தை எடுக்க முந்திக்கொண்டு கிடப்பது அவமானகரமாக இருக்கிறது. சீனா ஒரு வித்தியாசமான உலகம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த போனஸ் திட்டம் இப்ப இணையத்துல செம வைரல் ஆகிவிட்டது! ஊழியர்கள் பணத்த அள்ளிட்டுப் போறத பாத்து எல்லாரும் ஷாக் ஆகிப் போய்ட்டாங்க!












Click it and Unblock the Notifications