மெல்ல மெல்ல.. கருப்பு கலரில் மாறிய டாக்டரின் உடம்பு.. உயிர் பிரிந்த பரிதாபம்.. அதிர்ச்சியில் சீனா!

சீன டாக்டர் ஹூ வெய்பெங் கொரோனாவால் உயிரிழந்தார்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: கொரோனா பாதிக்கப்பட்ட டாக்டருக்கு உடம்பெல்லொம் கலர் மாறி கொண்டே வந்தது.. கருப்பு கலராக மாறிய நிலையில், சிகிச்சை பலனின்றி டாக்டர் இறந்துவிட்டார்.. இந்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது!!

சீனாவில் முன்னணி டாக்டர் அவர்.. பெயர் ஹூ வெய்பெங்... கிட்னி ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்தவர்.. அந்த பகுதி முழுவதும் ஹூ பெயர் சொன்னால் அவ்வளவு பிரபலம்.

 chinese doctor Hu Weifeng dies due to coronavirus

இந்நிலையில், இவருக்கு கடந்த ஜனவரி மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது... அதேபோல, இவருடன் வேலை பார்த்த மற்றொரு டாக்டர் யி-பன் என்பவருக்கும் தொற்று உறுதியானது.. இருவருமே ஒரே ஆஸ்பத்திரி.. அந்த டாக்டர் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்!!

ஒரே நேரத்தில் வைரஸ் தொற்று உறுதியாகவும், இருவருமே சிகிச்சை பெற்று வந்தனர்... இவர்களுக்கு தீவிரமான சிகிச்சை ஜனவரி மாதமே தரப்பட்டு வந்தது.. ஆனால் இவர்களது உடலின் நிறம் கருப்பானது.. நிறம் மாறியது கண்டு அங்கிருந்த டாக்டர்களே அதிர்ச்சியானார்கள்.. வென்டிலேட்டர் பொருத்தப்பட்டும், அதற்கள் இவர்களது கருத்த முகத்துடன் இருக்கும் போட்டோக்கள் வெளியானது.. இது சோஷியல் மீடியாவில் பரவி, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

ஒருகட்டத்தில் டாக்டர் ஹூ வெய்பெங்-கின் உடல்நிலையில் முன்னேற்றம் வந்தது.. இன்னொரு டாக்டர் யி பன் உடல்நிலை தேறி மார்ச் மாதம் டிஸ்ஜார்ஜ் ஆகி வீட்டுக்கு போய்விட்டார்.. ஆனால் டாக்டர் ஹூ வெய்பெங்-கிற்கு ஏப்ரல் மாதம் நிலைமை சீரியஸாகி விட்டது.. அவரது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது... அவரை காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும், அது முடியாமல் போய்விட்டது.. டாக்டர் ஹூ பரிதாபமாக உயிரிழந்தார். சக டாக்டர்களுக்கு இது அதிர்ச்சியை தந்து வருகிறது.

இந்நிலையில், டாக்டர் ஹூ மரணமடைந்ததால், சீனாவுக்கு பின்னடைவாக இது பார்க்கப்படுகிறது.. முதன்முதலில் தோன்றிய வைரஸை கட்டுக்குள் கொண்டு வந்த சீனாவால், ஒரு டாக்டரை 4 மாசமாகியும் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என்கிறார்கள்.

அது மட்டுமல்ல.. முதன்முதலில் இந்த வைரஸ் பற்றின தீவிரத்தை உலகுக்கு எடுத்து சொன்ன டாக்டர் லி வென்லியாங், வேலை பார்த்த அதே ஆஸ்பத்திரியில்தான் டாக்டர் ஹூ-வும் பணியாற்றி வந்திருக்கிறார்.. டாக்டர் ஹூவின் மரணம் குறித்து எந்த மீடியாவிலும் சரியான கருத்துக்கள் சொல்லப்படவில்லை என்பதால் சீன மக்கள் கடுமையான கொந்தளிப்பில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+