சிறுவர்களின் சிறுநீரை உணவில் கலந்து சாப்பிடும் சீனர்கள்.. இது என்ன புது 'டிஷ்' ஆக இருக்கு!.. உவ்வே!
பீஜிங்: சீன மக்களிடையே விசித்திரமான உணவு பழக்க வழக்கம் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வித விதமான உயிரினங்களை பிடித்து சாப்பிடுவது மட்டும் இன்றி.. இப்படியெல்லாம் உணவை சாப்பிட முடியுமா? என யோசிக்கும் அளவுக்கு சில உணவுகளை சீனர்கள் சாப்பிடுவதாக சொல்கிறார்கள். அந்த வகையில், சில சீனர்கள் இடையே உணவில் சிறுநீரில் கலந்து சாப்பிடும் பழக்கம் இருக்கிறதாம். அது பற்றிய விவரத்தை பார்ப்போம்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று சீனா. உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடம் வகிக்கும் சீனாவில் பல வினோத பழக்க வழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன. அதிலும் உணவு வகையில் எடுத்துக்கொண்டால்.. நாம் பார்க்கவே அருவருக்கும் உயிரினங்களை பிடித்து ருசிக்க ருசிக்க சாப்பிட்டு விடுவார்கள்.

சீனாவின் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் தவளை, பல்லி, பாம்பு உள்ளிட்டவற்றையும் வாங்கி சென்று வீட்டில் வேகவைத்து சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுவார்கள். பறப்பது.. ஊர்வது.. என பெயருக்கும் இல்லாமல் உண்மையாகவே எந்த பாரபட்சமும் காட்டாமல் அனைத்தையும் ருசி பார்ப்பதில் சீன மக்களுக்கு நிகர் யாரும் கிடையாது. பாம்பு, பல்லிகள் மட்டும் அல்ல.. அவர்கள் உணவை சமைக்கும் விதம் கூட.. இந்தியா போன்ற நாட்டில் உள்ளவர்களுக்கு குமுட்டலை வர வைத்துவிடும்..
உண்மைதாங்க.. சிறுநீரில் வேகவைத்து முட்டையை சாப்பிடுவது என பல வினோத உணவு பழக்க வழக்கம் இன்றளவும் சீன மக்களிடையே உள்ளது. இதை மெய்ப்பிக்கும் விதமாக தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்று பரவி வருகிறது. இந்த வீடியோவில், குடும்பமாக அமர்ந்து டைனிங் டேபிளில் சாப்பிட பெண் உள்பட பலரும் தயாராக உள்ளனர்.
அப்போது ஒரு சிறு குழந்தை அவர்கள் சாப்பிடும் உணவின் மீது சிறு நீர் கழிக்கிறது.. குழந்தைகள் விளையாடும் போது தவறுதலாக நடந்து இருக்கலாம் என நினைக்க வேண்டாம்.. வேண்டும் என்றே, இப்படி சாப்பிடும் உணவின் மீது குழந்தையை சிறு நீர் கழிக்க வைத்து சாப்பிடுவதாக அந்த பெண் கூறியிருக்கிறார்.. அவரே இதை தனது சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து இருக்கிறார்.
அந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும்.. இங்கே என்ன நடக்கிறது.. இதெல்லாம் உண்மைதானா? என வியப்புடன் பதிவிட்டு வருகிறார்கள். உணவில் சிறு நீர் கழிக்கும் குழந்தையின் வயது பற்றியோ, தனது குடும்ப பின்னணி குறித்தோ வேறு எந்த விவரத்தையும் அந்த பெண் பதிவிடவில்லை. தனது பதிவில் அந்த சீன பெண் கூறியதவது:-
"தங்கள் வீட்டில் எப்போதாவதுதான் குழந்தைக்கு டயபர் அணிந்துவிடுவோம். சிறுவர்கள் சிறுநீர் கழிக்கும் போது அதை இயல்பாகவே செல்ல அனுமதிப்பது நல்லது" என்று கூறியிருக்கிறார். மேலும், சிறுநீரில் நனைந்த உணவை சாப்பிட்டதாகவும் அந்த பெண் பதிவிட்டு இருக்கிறார். வீடியோவுடன் அந்த பெண் பதிவிட்டதை பார்த்ததும் நெட்டிசன்கள் பலரும் வியப்புடன் பதிவிட்டு வருகிறார்கள்.
10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் யூரினில் சூப்பர் பவர் இருப்பதாக நம்பும் வினோத கலாசாரம் சில சீன மக்கள் மத்தியில் இருக்கிறதாம். காய்ச்சல் போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் சிறுவர்களின் சிறுநீர் குணப்படுத்தும் என இவர்கள் நம்புவதாகவும் துரதிர்ஷ்டம், கெட்ட ஆவிகள் ஆகியவற்றை விரட்டும் சக்தி சிறுவர்களின் சிறுநீருக்கு இருப்பதாகவும் நம்புகிறார்களாம்.
அதிலும் ஒரு மாதத்திற்கு உட்பட்ட குழந்தையின் சிறுநீருக்கு தான் சூப்பர் பவர் உள்ளதாக நம்பும் விசித்திர பழக்கம் இருக்கிறதாம். அது போக சிறுநீரில் வேகவைத்த முட்டைகளை சாப்பிட்டால் வெப்பத்தாக்கு போன்ற பாதிப்பு ஏற்படாது எனவும் நம்புகிறார்களாம்.












Click it and Unblock the Notifications