உரிமையாளருக்கு சிம் உடன் 11 பக்க காண்டாக்ட் லிஸ்ட் அனுப்பிய வினோத ‘ஐபோன்’ திருடன்
பெய்ஜிங்: திருடர்களில் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக சீனாவில் ஒரு வினோதச் சம்பவம் நடந்துள்ளது.
திருடிச் சென்ற ஐபோனில் இருந்த சிம் கார்டுடன், ஐபோனில் பதிவாகியிருந்த தொடர்பு எண்களை கிட்டத்தட்ட 11 பக்கத்தில் எழுதி ஐபோனின் உரிமையாளருக்கு அனுப்பியுள்ளான் திருடன் ஒருவன்.

ஐபோன் களவு....
சீனாவைச் சேர்ந்த ஷோயூ என்பவர் சமீபத்தில் வாடகைக் காரில் சென்று கொண்டிருந்த போது தனது ஐபோனை களவு கொடுத்தார்.

குறுந்தகவல்....
தனக்கு பின் அமர்ந்திருந்த ஒருவாரின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் கொண்ட ஷோயூ, தனது நண்பரின் தொலைபேசியில் இருந்து ஒரு குறுந்தகவை தனது ஐபோனிற்கு அனுப்பினார்.

விரைவில் கண்டுபிடிப்பேன்....
அதில், ‘நீ யார் என எனக்குத் தெரியும். காரில் எனது பின்னாள் அமர்ந்திருந்தவன் தான் நீ என உறுதியாக என்னால் சொல்லமுடியும். விரைவில் உன்னைக் கண்டுபிடிப்பேன்' என தெரிவித்திருந்தார்.

பார்சல்....
இந்தக் குறுந்தகவல் கிடைக்கப் பட்ட திருடன் என்ன நினைத்தானோ தெரியவில்லை. அடுத்த சில நாட்களில் ஷோயூவுக்கு ஒரு பார்சல் அனுப்பியுள்ளான்.

100 தொடர்பு எண்கள்....
அதில், அவரது சிம்கார்ட்டுடன் ஐபோனில் இருந்த 1000 தொடர்பு எண்களைக் கிட்டத்தட்ட 11 பக்கங்களில் கையாலேயே எழுதி அனுப்பி அனுப்பியுள்ளான் அந்தத் திருடன்.

நல்ல திருடன்....
திருடனாக இருந்த போதும், மனசாட்சியோடு நடந்து கொண்டதாக திருடனின் செய்கையை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளன சீனப் பத்திரிக்கைகள்.

அம்மாடியோவ்....
அமெரிக்க போலீசார் வெளியிட்டுள்ள தகவலில் திருடர்களின் முக்கியக் குறிக்கோள் ஐபோன், ஆப்பிள் பொருட்கள் தான் எனக் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 2012ம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 16ஆயிரம் குற்றங்கள் இவ்வாறு நடந்துள்ளதாம்.

நல்ல விலை....
இவ்வாரு திருடப்படும் ஐபோன்கள் சந்தையில் அதிக விலைக்குப் போவதே இத்தகைய திருட்டு சம்பவங்கள் அதிகரிக்க முக்கியக் காரணம் என காவல்துறைக் காரணம் கூறுகிறது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications