ஓவர்நைட்டில் ரூ.13,700 கோடிக்கு அதிபதியான சீன இளைஞர்.. காரணம் அதிர்ஷ்டம் இல்லை உழைப்பு! அடடே சூப்பர்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: இந்த நவீனக் காலத்தில் பக்காவாக திட்டமிட்டு ஒரு காரியத்தைச் செய்தால் அது நிச்சயம் வெற்றி அடையும். அப்படி தான் இங்குச் சீன இளைஞர் செய்த காரியத்தால் ஓவர் நைட்டில் அவர் ரூ.13,700 கோடி சம்பாதித்து இருக்கிறார். அந்த இளைஞர் எப்படி அதைச் செய்தார். இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

இந்த காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் சமூக வலைத்தளத்தின் ஆதிக்கமே இருக்கிறது. இதனால் எப்போது எந்த நேரத்தில் எது டிரெண்டாகும் என்பதை யாராலும் துல்லிமயாக சொல்ல முடிவதில்லை.. திடீரென டிரெண்டாவதால் ஓவர்நைட்டில் புகழின் உச்சிக்குப் போகும் பலரை நாம் பார்த்து இருக்கிறோம்.

Chinese man gets richer by Rs 13 700 crore in single day thanks to his Labubu Doll

சீன இளைஞருக்கு ஜாக்பாட்

அப்படி தான் இங்கே சீனாவைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு ஜாக்பாட் அடித்துத் தூக்கி இருக்கிறது. இவர் தயாரித்த பொம்பை தாறுமாறாக ஹிட் அடித்ததே இதற்குக் காரணமாகும். இது விற்பனைக்கு வந்தபோது ஒரே நேரத்தில் பலரும் இதை வாங்கக் கடைகளில் முந்தி அடித்தனர். இதனால் பல இடங்களில் கிட்டதட்ட வன்முறை ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமானது.

ஒரே நாளில் ரூ.13,700 கோடி

இந்த பொம்மையைக் கண்டுபிடித்ததன் மூலம் இதைத் தயாரித்து விற்கும் பாப் மார்ட் இன்டர்நேஷனலின் தலைவரும் சிஇஓவுமான வாங் நிங், ஒரே நாளில் 1.6 பில்லியன் டாலர் சம்பாதித்து இருக்கிறார். அதாவது ஒரே நாளில் இவரது செல்வம் ரூ.13,700 கோடி அதிகரித்துள்ளது. இப்படி ஓவர் நைட்டில் அவரை கோடீஸ்வரன் ஆக்கிய பொம்மையின் பெயர் லாபுபு பொம்மைகள்.

சீனாவின் ஹாங்காங்கை சேர்ந்த கேசிங் லுங் என்பவர் கடந்த 2015ல் தனது புத்தகம் ஒன்றில் வரைந்த கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த லாபுபு பொம்மை உருவாக்கப்பட்டது. தனித்துவமான முயல் காதுகள் மற்றும் முகத்தில் ஒரு நக்கல் சிரிப்பைக் கொண்ட இந்த பொம்மை இளசுகள் மனதைக் கொள்ளை கொள்வதாக அமைந்தது.

மக்களிடையே வரவேற்பு

கேசிங் லுங் இந்த பொம்மைகளை விற்க பாப் மார்ட்டுடன் கூட்டணி அமைத்தார். அந்த பாப் மார்ட் இவரது பொம்மைகளைச் சீனாவின் மூலை முடுக்கிற்கும் எடுத்துச் சென்றது. இந்த பொம்மை குறிப்பாக 2கே கிட்ஸ் மத்தியில் அதீத வரவேற்பைப் பெற்றது. ஒரே நபரே பல கலர், பல மாடல்களில் இந்த பொம்மைகளைச் சேர்த்து வைக்கும் அளவுக்கு வை டிரெண்ட் ஆனது. பல பிரபலங்கள் கூட இந்த பொம்மையை ஆர்வமாக வாங்க ஆரம்பித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் தான் இந்த பொம்மை அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது. சீனாவுக்கு இணையாக அமெரிக்காவிலும் இதற்கான வரவேற்பு அதிகமாகவே இருந்தது. பலரும் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்கினர். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தும் கூட பலரும் இந்த லாபுபு பொம்மைகளை வாங்கினர். இதன் மூலம் ஒரே நாளில் 1.6 பில்லியன் டாலர் பணக்காரரானார். அதாவது இவரது செல்வம் ஒரே நாளில் ரூ.13,700 கோடி அதிகரித்துள்ளது.

அதிர்ஷ்டம் இல்லை உழைப்பு

இப்படி ஒரே நாளில் பல கோடி சம்பாதித்தது எனச் சிலர் சொன்னாலும்.. அதன் பிறகு இவரது நீண்ட கால உழைப்பு இருக்கிறது என்பதே உண்மை. பல ஆண்டுகள் அவர் உழைத்த உழைப்பின் பலனாகவே இவருக்கு ஒரே நாளில் பல ஆயிரம் கோடி வருமானம் கொட்டி இருக்கிறது.

அமெரிக்கா சீனா இடையே கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி 1.5 மாதங்கள் வர்த்தக போர் இருந்தது அனைவருக்கும் தெரியும். முதலில் டிரம்ப் வரிகளை அறிவிக்க அதற்குச் சீனாவும் பதிலடியாக வரிகளை அறிவித்தன. இப்படி இரு நாடுகளும் தொடர்ச்சியாக வரிகளை அறிவித்தன. இந்தளவுக்கு இரு நாடுகளுக்கும் இடையே குழப்பம் இருந்தபோதிலும், இந்த லாபுபு பொம்மைகளின் விற்பனை மட்டும் குறையவே இல்லையாம். தாறுமாறாக விற்பனை தொடர்ந்து அதிகரித்தே வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+