தனித்து விடப்படும் ஐரோப்பிய யூனியன்! சீனா வைத்த செக்.. இந்தியா உஷார்!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: ஒரு காலத்தில் ஆசியாவில் மிகப்பெரிய அளவுக்கு ஆதிக்கத்தை செலுத்தி வந்த ஐரோப்பிய யூனியன் தற்போது டம்மி பீஸாக மாறியிருக்கிறது. சீனா-ஐரோப்பிய யூனியன் உறவின் 50வது ஆண்டு விழாவை கொண்டாடும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதை சீன அதிபர் தவிர்த்திருப்பதான் மூலம், ஐரோப்பிய யூனியன் தனித்துவிடப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

பிரஸல்ஸில் நடைபெறும் இந்த மாநாட்டில் சீனாவின் அதிபருக்கு பதில் அந்நாட்டின் பிரதமர் பங்கேற்கிறார். இது ஐரோப்பிய யூனியன் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. மறுபுறம் சீனாவின் இந்த நடவடிக்கை இந்தியாவை உஷார் படுத்தியிருக்கிறது.

China EU international

16ம் நூற்றாண்டிலிருந்து ஆசியா மீது ஐரோப்பா ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தது கூட பிரிட்டன் எனும் ஐரோப்பிய நாடுதான்.

பிரிட்டன் - இந்தியா, பாகிஸ்தான், மியான்மர், மலேசியா, ஹாங்காங், சிங்கப்பூர்
பிரான்ஸ் - வியட்நாம், லாவோஸ், கம்போடியா
நெதர்லாந்து - இந்தோனேஷியா
போர்ச்சுகல் - கோவா (இந்தியா), மக்காவ் (சீனா), திமோர்
ஸ்பெயின் - பிலிப்பைன்ஸ்

ஆகிய நாடுகளை அடிமைப்படுத்தி வைத்திருந்தன. பின்னர் இந்த நாடுகளில் சுதந்திர போராட்டங்கள் வெடிக்க தொடங்கியதையடுத்து, 1945 வாக்கில் ஐரோப்பிய நாடுகள் பிடியை தளர்த்தின. ஆனாலும்.. உலக வங்கி (World bank), சர்வதேச நாணய நிதியம் (IMF) மூலம் கடன் கொடுத்து இன்று வரை ஆசிய நாடுகளை கட்டுப்படுத்தி வருகின்றன.

இப்படி இருக்கையில் தற்போது ஐரோப்பிய நாடுகளின் பிடி தளர்வை கண்டிருக்கிறது. குறிப்பாக ஐரோப்பிய யூனியனின் பலவீனமடைந்திருக்கிறது. ஏனெினல் இதுநாள் வரை ஐரோப்பிய யூனியனுக்கு அமெரிக்க கொடுத்து வந்த ஆதரவு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. அதேபோல, சீனா மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக வளர்ந்திருக்கிறது.

சீனாவின் வளர்ச்சியை முன்கூட்டிய கணித்த ஐரோப்பிய யூனியன் கடந்த 50 ஆண்டுகளாக அந்நாட்டுடன் நட்பு பாராட்டி வந்திருக்கிறது. இந்த உறவின் 50வது ஆண்டுதான் 2025. இதனை கொண்டாடும் விதமாக பிரஸல்ஸில் உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வழக்கமாக இந்த மாநாட்டில் சீனாவின் பிரதமர்தான் பங்கேற்பார். ஆனால், இந்த முறை அதிபர் ஜி ஜின்பிங்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சர்வதேச சூழலில் அமெரிக்காவை எதிர்கொள்ள பலமான பொருளாதார கட்டமைப்புகள் கொண்ட நாடுகளுடன் சீனா கைகோர்க்க வேண்டும். அப்படியொரு நாடாக/நாடுகளின் கூட்டமைப்பாக ஐரோப்பிய யூனியன் இருக்க வேண்டும் என்பது அந்த யூனியனில் உள்ள நாடுகளின் எண்ணம். எனவே, சீனா வழிக்கு வரும் என்று யூனியன் எதிர்பார்த்தது. இந்த எதிர்பார்ப்பில் ஒரு லோடு லாரி மண்ணை வாரி சீனா கொட்டியிருக்கிறது. 'நீ நடத்துற மாநாட்டுக்கெல்லாம் என்னால வர முடியாது' என்கிற தொணியில், வழக்கம்போல பிரதமரை அனுப்பி வைப்பதாக கூறியிருக்கிறது சீனா.

இந்த டிவிஸ்ட்டை ஐரோப்பிய யூனியன் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு பக்கம் அமெரிக்கா கழற்றிவிட்டுவிட்டது. மறுபக்கம் ரஷ்யாவின் அதிரடியான போர் இதற்கிடையில் சீனாவுடன் கைகோர்த்து பிழைப்பை ஓட்டிக்கொள்ளலாம் என்று நினைத்திருந்த ஐரோப்பிய யூனியனுக்கு இது பலமான சறுக்கல்தான்.

சீனா இப்படி சொன்னதுக்கு காரணம் பல இருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளின் கை மீண்டும் ஓங்க கூடாது, ரஷ்யா-உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் செய்யும் உதவி, சீனாவிலிருந்து வரும் மின்சார வாகனங்களுக்கு ஐரோப்பா கூடுதல் வரிகள் விதித்திருப்பது, சீனாவிலிருந்து ஜவுளி துறைக்கு பயன்படுத்தப்படும் ரசாயனம், மிட்டாய், மெல்லிய உலோக ஸ்க்ரூ மற்றும் மெழுகுவர்த்திகள் ஆகிய பொருட்கள் தவறாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன என்று கூறி ஐரோப்பிய யூனியர் சார்பில் தொடங்கப்பட்ட விசாரணையை ஆகியவை காரணமாக சீனா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

எனவே ஐரோப்பிய யூனியனுடன் எதுக்கு உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்? இருக்குற உறவை மெயின்டெயின் செய்தால் மட்டும் போதும் என்கிற காரணத்தால்தான் உச்சி மாநாட்டுக்கு அதிபரை தவிர்த்துவிட்டு வழக்கம்போல பிரதமரையே அனுப்பி வைக்க சீனா முடிவெடுத்துள்ளது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் இந்த நடவடிக்கையால் ஐரோப்பிய யூனியன் டம்மியாக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. டம்மியான ஐரோப்பிய நாடுகள், யார் தலையில் மிளகாய் அரைப்பது என்று தெரியாமல் வர்த்தகத்திற்கு வெறிகொண்டு நாடுகளை தேடிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இந்தியா தலையை கொடுத்து மாட்டிக்கொள்ளக்கூடாது என்று பலரும். இது குறித்த நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+