"ஹாட் கிஸ்".. வீடியோகாலில் சுடச்சுட முத்தம் தரும் காதலி.. வந்தாச்சு 'கிஸ்ஸிங் டிவைஸ்'.. ஸ்பெஷலே இதான்
தொலைதூரத்தில் உள்ள காதலர்களுக்காகவே "கிஸ்ஸிங் டிவைஸ்" என்ற முத்தம் தரும் கருவியை சீனா கண்டுபிடித்துள்ளது
பெய்ஜிங்: வீடியோ கால்கள் மூலம் காதலை தொடரும் காதல் ஜோடிகளுக்காக சீன ஆய்வாளர்கள் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவி மூலம் முத்தத்தை பகிர்ந்து கொள்ள முடியும். அதாவது உண்மையான முத்தத்தை பெறுவதை போன்ற ஃபீல் இதில் கிடைக்கும்.
என்னதான் நவீன கண்டுபிடிப்புகள் பெருகி வந்தாலும், தொலைதூர காதல் என்பது இன்றைய காலத்தில் பெரும் சவாலாக இருக்கிறது. வெறும் குரலையும், வீடியோ கால் மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று காதலர்கள் புலம்பி வருகின்றனர். ஒரு காலத்தில் கடித போக்குவரத்து காதலர்களை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டிருந்தது. இந்த கடிதங்களை வைத்து ஒரு பெரும் நாவலே எழுதிவிடலாம்.
பின்னர் தொழில்நுட்பம் மெல்ல வேர்விட தொடங்கியது. கடித்திலிருந்து தந்தியும், தந்தியிலிருந்து பேஜரும் பின்னர் டெலிபோனுமாய் வந்து சேர்ந்தது. இந்த மாற்றம் உலகை கைக்குள் கொண்டு வந்தது. நினைத்த நேரத்தில் நினைத்த மனிதர்களிடம் பேசும் 'மேஜிக்' யாருக்கு பயன்பட்டதோ இல்லையா, காதலர்களுக்கு ஒரு வரம் போல பேருதவி செய்தது. இதன் பின்னர் வந்த இன்டெர்நெட் மனிதர்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டது.

நவீன கண்டுபிடிப்புகள்
இன்டெர்நெட்+செல்போன் காதலின் தெய்வீகமாக மாறிப்போனது. காதலுக்கு இன்றியமையாததாக இது இருந்தது. சில காதலர்களின் வீடியோ கால்கள் நியூஸில் வரும் அளவுக்கு சம்பவமாகியது. ஆனாலும் காதலர்கள் மத்தியில் ஒரு குறை இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. பயணித்தின்போது தனக்கு முன்னர் தன்னுடைய மனம் சென்று காதலியுடன் உரையாடுவதை போல வீடியோ கால்களின் வேகத்தை விட, அது தரும் உணர்ச்சி பெருக்கைவிட அதிகமாக உணர்ச்சி பெருக்கை தரும் வேறு ஏதேனும் பொருள் இருக்கிறதா? என்று காதலர்கள் தேடி கொண்டிருக்கிறார்கள்.

சீனா
இவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சீனாவின் சான்சோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் முத்த கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவி தற்போது சீனாவில் பேசுபொருளாகியுள்ளது. சிலிக்கான் ரப்பர் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த முத்த கருவி கான்ட்ராப்ஷனில் பிரஷர் சென்சார்கள் மூலம் இயங்குகிறது. இது நமக்கு முத்தம் கொடுத்தால் அது உண்மையான முத்தத்தை போன்றே இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

எப்படி இயங்குகிறது?
நம்முடைய உதட்டின் அழுத்தம், வெப்பநிலை மற்றும் இயக்கத்தை அப்படியே இந்த கருவி பிரதிபலிக்கும். இதனை பயன்படுத்துவதும் மிகவும் சுலபமானது. இந்த கருவிக்கான அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் இந்த ஆப்பில் முத்த கருவைியை இணைக்க வேண்டும் அவ்வளவுதான். இப்போது சூடான முத்தத்தை பெற நீங்கள் தயாராகிவிட்டீர்கள். இதேபோல உங்களுடைய காதலியும் இந்த கருவியை வைத்திருக்க வேண்டும்.

ஹாட் கிஸ்
அப்புறம் என்ன? நீங்கள் கொடுக்கும் முத்தத்தை அவர்கள் பெறலாம். அவர்கள் கொடுக்கும் முத்தத்தை நீங்கள் பெறலாம். லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கண்டுபிடிப்பாளர்கள் கூறியுள்ளனர். சரி கிஸ் செய்ய மெஷின் கண்டுபிடிக்கப்பட்டது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் கடந்த 2016ம் ஆண்டு மலேசியாவின் இமேஜினியரிங் நிறுவனம் இதேபோன்ற மெஷினை உருவாக்கியிருந்தது.
ஆனால் அது இவ்வளவு நுட்பமாக வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மெஷின் செம ஹாட்டாக இருப்பதாக பயன்பாட்டாளர்கள் கூறுகின்றனர். சரி அதெல்லாம் போகட்டும் இதன் விலை எவ்வளவு என்று கேட்கிறீர்களா? வெறும் ரூ.3,433தான்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications