என்னல்லாம் பண்ணுது பாருங்க இந்த சீனா.. ஆய்வாளர்கள் கண்டுபிடித்த "ரோபோ மீன்கள்!" எதற்காக தெரியுமா?
பெய்ஜிங்: கடலில் இருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து உள்ள நிலையில், இதற்குத் தீர்வை சீன ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
இந்த பூமியை நாம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமாக மாசுபடுத்தி வருகிறோம். தொழிற்புரட்சிக்குப் பின்னர், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலகம் மாசடைந்து வருகிறது.
மனிதர்களால் நிலங்கள் மட்டும் தான் மாசடைகிறது என்று இல்லை. பெருங்கடல்களையும் கூட மனிதர்கள் விட்டு வைப்பதில்லை. பிளாஸ்டிக் பாதிப்பு தான் பெரிய பிரச்சினையாக உள்ளது.

மீன்கள்
குறிப்பாகப் பெருங்கடல் பகுதிகள் மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் சிறு வகை பிளாஸ்டிக் துகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடலில் வாழும் மீன்கள் தொடங்கி பல்வேறு உயிரினங்களும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், இதற்குத் தீர்வாக மைக்ரோ பிளாஸ்டிக்ஸை சாப்பிடும் ரோபோ மீன்களைச் சீனாவில் உள்ள சிச்சுவான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர். இவை ஒரு நாள் உலகின் மாசுபட்ட கடல்களை நிச்சயம் சுத்தம் செய்ய உதவும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தனித்துவமானது
இது பார்க்க உயிருள்ள மீனைப் போலவே இருக்கும். மேலும் மீனைப் போலவே அதன் அசைவுகளும் இருக்கும். இதனை பயோனிக் ரோபோ என்றும் குறிப்பிடுவார்கள். இதற்காக இவர்கள் சுமார் 40 வகையான மீன்களை 30 வடிவமைப்புகளில் உருவாக்கி உள்ளனர். பழைய மாடல்கள் நீரை இழுத்து பிளாஸ்டிக்கை வடிகட்டும் திறனை மட்டுமே கொண்டு இருந்தது. ஆனால் இந்த முறை உருவாக்கப்பட்டுள்ள ரோபோ மீன்கள் சற்று தனித்துவமானது.

மைக்ரோபிளாஸ்டிக்
இப்போது உருவாக்கி உள்ள ரோபா மீன்கள் உண்மையான மீன்களைப் போலவே தொடுவதற்கு மென்மையாக இருக்கும். மைக்ரோபிளாஸ்டிக்கை சாப்பிடுவது தான் இந்த மீன்களின் முக்கிய வேலையாகும். இதன் மூலம் ஒரு நாள் நிச்சயம் மாசுபட்ட கடல் சுத்தமாகும் என்று சீன ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆழமற்ற நீரில் இதை அவர்கள் ஏற்கனவே வெற்றிகரமாகச் சோதனை செய்து உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

சிக்கலான ஆப்ரேஷன்
ஆழமான நீரில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸை அகற்றுவதும் கடல் மாசு குறித்து தகவல்களைத் தெரிந்து கொள்வதும் தான் தங்கள் முக்கிய நோக்கம் என்று வாங் யுயன் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், "பல காரணங்களுக்காக நாங்கள் இந்த சிறு வகை ரோபோக்களை உருவாக்கி உள்ளோம். சிக்கலான ஆப்ரேஷன்களுக்கு கூட இதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றும் அவர் தெரிவித்தார்.

வேகம்
இந்த மீன்களின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், பெரும்பாலான செயற்கை மென்மையான ரோபோக்களை விட அவை வேகமாக நீந்த முடியும். மேலும், இந்த மீன்கள் பிளாஸ்டிக்குகளை உறிஞ்சுவது மட்டுமில்லாமல், சேதம் அடைந்தாலும் தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ள முடியும். மேலும், ஒரு மீன்களைப் பல முறை திரும்பப் திரும்ப பயன்படுத்தவும் முடியும்.

வேகமாக நீந்த முடியும்
மேலும், மற்ற மீன்கள் மற்றும் கப்பல்களுடன் மோதுவதைத் தவிர்க்கும் வகையில் இந்த ரோபோ மீன்களை வெளியே இருந்தே கட்டுப்படுத்த முடியும். அதேபோல மற்ற மீன்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தற்செயலாக மற்ற மீன்களால் உண்ணப்பட்டால், ஜீரணம் ஆகும் வகையிலும் இந்த மீன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications