செக்ஸ் பொம்மை வாடகை சேவையை சீன நிறுவனம் நிறுத்தியது ஏன்?
செக்ஸ் பொம்மைகளை வாடகைக்கு அளிக்கும் ஒரு சீன நிறுவனம், ஆரம்பித்த சில தினங்களில் சேவையை நிறுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை முதல், டச் நிறுவனம் தின வாடகை மற்றும் நீண்ட நாட்களுக்கான வாடகையில், 5 வகையான செக்ஸ் பொம்மைகளை வழங்க துவங்கியது; ஆனால் அது நிறைய புகார்களையும் விமர்சனங்களையும் ஈர்த்தது.
வெய்போ எனப்படும் சீன சமூக ஊடகத்தில், அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ள டச் நிறுவனம், இந்த திட்டத்தின் "எதிர்மறையான தாக்கங்களுக்கு உண்மையாக மன்னிப்பு கேட்டுகொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
ஆனால், அந்த நிறுவனம், செக்ஸ் "கொச்சையான ஒன்றல்ல" என்றும், தொடர்ந்து மக்களை மகிழ்விக்கும் வகையில் பணிகள் தொடரும் என கூறியுள்ளது.
- வீட்டு வாடகையாக செக்ஸ் மட்டும் போதும்!'
- முஸ்லிம் பெண்களுக்கு ஹலால் செக்ஸ் வழிகாட்டி
- ஐ.எஸ் அமைப்பிடமிருந்து போராடி மகள்களை மீட்ட தந்தை
- பெண்களுக்கான 'டவல்' பிராவுக்கு பெருகும் ஆதரவு
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய டச் நிறுவனம், இந்த வாடகை சேவை இரண்டு நாட்களுக்கு இயங்கியதாகவும், இதன்மூலம் அதிகம் பேரின் விருப்பத்தையும் கோரிக்கைகளையும் பெற்றதாகவும் கூறியுள்ளது.
அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் கூறுகையில், "நாங்கள் சோதனை முயற்சியாக பத்து பொம்மைகளை தயாரித்தோம்" என்றதுடன், பயன்பாட்டாளர்களிடம் இருந்து நிறைய நேர்மறையான கருத்துக்களை அது பெற்றது என்றும் கூறியுள்ளார்.
"ஆனால், சீனாவில் இது மிகவும் கடினம்" என எழுதியுள்ள அந்நிறுவனம், இந்த விவகாரத்தில் காவல்துறையுடன் அதிக சர்ச்சைகள் எழுந்ததாக கூறியுள்ளது.
அந்த நிறுவனம், செக்ஸ் பொம்மைகளை தினமும் , 298 யென்களுக்கு ( £34, $46) அளித்தது.
இந்த சேவையில் உள்ள பொம்மைகள் , சீனா ,கொரியா, ரஷியா பெண்கள் போலவும், ஆங்கில திரைப்பட கதாபாத்திரமான ஒண்டர் உமன் போல வாள் மற்றும் கேடயத்துடனும் உள்ளன.
அந்நிறுவனத்தின் வீபோ அறிக்கையில், அதிக விலையுள்ள சிலிக்கான் பொம்மைகளை வாங்கும் அளவிலான விலைகளில் விற்க வேண்டும் என்பதே அதன் எண்ணமாக இருந்ததாகவும், ஆனால், இந்த சேவை மிகவும் சூடான விவாதத்தை தூண்டிவிட்டுள்ளதை ஒப்புக்கொள்வதாகவும் கூறியுள்ளது.
இந்த பொம்மைகளை பெறுவதற்காக முன்பதிவு செய்தவர்களுக்கு இரு மடங்கு அளவிற்கு இழப்பீட்டு தொகையை வழங்கும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
ஆரோக்கியமான செக்ஸ் ஆண்களின் ஆயுளை அதிகரிக்குமா?
மேலும் அந்த அறிக்கையில் டச் நிறுவனம், வருங்காலங்களில் "சமுதாய கடமைகளை" கவனத்தில் கொண்டு செயல்படுவதுடன், "ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான செக்ஸ் வாழ்க்கை முறையை" ஊக்கப்படுத்தும் விதத்தில் செயல்படும் என்றும் கூறியுள்ளது.
இந்த குறுகிய கால வாடகை பொம்மை முறைகளை தவிர, அந்நிறுவனம், பல செக்ஸ் பொம்மைகளையும் விற்பனை செய்கிறது.
ஐ.எஸ். அமைப்பின் செக்ஸ் அடிமையாக இருந்து மீண்ட யாஸிடி பெண்கள்
பிற செய்திகள் :
- மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம்: 200-க்கும் மேற்பட்டோர் பலி
- 'ப்ளூ வேல்' விளையாட்டு தற்கொலைக்கு தூண்டுவது ஏன்?
- குண்டர் தடுப்புச் சட்டம் தவறாக பாய்வதை தடுப்பது எப்படி?
- மெக்சிகோவை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம் - புகைப்படங்கள்
- இந்தியா-பாகிஸ்தான் போர்: பல ஆண்டுகளுக்கு பிறகு வருத்தம் தெரிவித்த பாகிஸ்தானி விமானி
- எல்லை மீறினால் வடகொரியாவை அழிப்போம்: டிரம்ப்
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி














Click it and Unblock the Notifications