தடாலடியாக உள்ளே புகுந்த சீனா... தை“வானில்” வட்டமிடும் 21 போர் விமானங்கள்! எப்போது வேண்டுமானாலும்..
தைவான்: அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் வருகை தந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தைவான் வான் எல்லைக்குள் புகுந்து 21 சீன போர் விமானங்கள் வட்டமிட்டு வருகின்றன.
Recommended Video
கடந்த 1949 ஆம் ஆண்டு வெடித்த உள்நோட்டு போரை தொடர்ந்து சீனாவில் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. தைவான் சுயாதீனமாக செயல்பட்டு வந்தாலும் சீனா அதற்கு உரிமைகோரி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
முதல்கட்டமாக சிங்கப்பூருக்கு சென்ற அவர் அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசினார். அமெரிக்க சபாநாயகரின் இந்த ஆசிய பயணத்தில் தைவானும் இடம்பெற்று இருந்தது சீனாவுக்கு கொதிப்பை ஏற்படுத்தியது. நான்சி பெலோசி தைவான் வருவதாக வெளியான தகவலை தொடர்ந்து சீன அதிபர் ஜீ ஜின்பிங் கண்டனம் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
"நான்சி பொலோசி தைவான் வருவதை எங்களால் அனுமதிக்க முடியாது. நெருப்புடன் விளையாடுபவர்கள் சாம்பலாகி போவது உறுதி." என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் அவர் எச்சரிக்கை விடுத்தார். ஜீ ஜின்பிங்கின் எதிர்ப்பை தொடர்ந்து நான்சி பெலோசி தைவான் செல்வாரா? அல்லது பின்வாங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் நிலவியது.

தைவானில் பெலோசி
இந்த நிலையில் தனது பயணத்திலும் பின்வாங்காமல் அவர் தைவானுக்கு இன்று இரவு 8:15 மணியளவில் சென்றடைந்து இருக்கிறார். தைவான் சென்ற அவரை அந்நாட்டு அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். தைவான் தலைநகர் தைபே சென்றடைந்த அவருக்கு அந்நாடு ராணுவ பாதுகாப்பை அளித்து வருகிறது.

அதிபருடன் சந்திப்பு
நான்சி பெலோசிக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக 13 அமெரிக்க போர் விமானங்கள் ஜப்பானிலிருந்து தைவானின் தைப்பே நகருக்கு சென்றடைந்து உள்ளன. தலைநகர் தைபேவில் உள்ள கிராண்ட் ஹைத் விடுதியில் அவரை தங்க வைக்கப்பட்டு இருக்கிறார். நாளை தைவான் அதிபர் சாய் இங் வென்னை அமெரிக்க சபாநாயகர் நான்சி சந்திக்க இருக்கிறார்.

போர் விமானங்கள்
இதுகுறித்து சீன பாதுகாப்புத்துறை தெரிவிக்கையில், "சீன ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. திட்டமிட்ட ராணுவ நடவடிக்கைகளை எடுப்போம். சீனாவின் பாதுகாப்பு படை இன்று இரவு கூட்டு ராணுவ பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம். தைவானின் கிழக்கு கடல் பகுதியில் ஏவுகணை சோதனை நடத்த உள்ளோம்." என்று அறிவித்தது. இந்த நிலையில் தைவானின் வான் எல்லையில் 21 சீன போர் விமானங்கள் புகுந்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications