சீனாவில் கம்ப்யூட்டரே குழம்பிருச்சாம்.. கல்யாண பத்திரிகையை கண்டு மலைத்த உறவினர்கள்! அங்கேதான் விஷயமே

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: காதலித்து திருமணம் செய்வது ஒன்றும் புதிதல்ல.. ஆனால், காதலிக்கும் பெண்ணின் பெயரும் நம்ம பெயரும் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும்? அதுவும் இருவரும் ஒரே துறையில் வேலை பார்ப்பவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்! இப்படியொரு சுவாரசியமான சம்பவம்தான் சீனாவில் நடந்துள்ளது. ஒரே பெயரை கொண்ட இளைஞரும் இளம்பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களது கதை இப்போது சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறது. யார் இந்த ஜோடி?

கிழக்கு சீனாவின் செஜியாங் மாகாணத்தில் உள்ள யிவு நகரத்தைச் சேர்ந்தவர்தான் 33 வயது மணமகன். இவரது மணமகளுக்கு 28 வயது. இதில் என்ன விசேஷம் என்றால், 2 பேரின் பெயரும் "ஜூ சியாசோங்" (Zhu Xiaosong) என்பதுதான்... சீன மொழியிலும் 2 பேரின் பெயரும் ஒரே எழுத்துக்களில் எழுதப்படுகின்றன.

Chinese Wedding Chinese Couple Zhu Xiaosong

மணமகள் விமான பணிப்பெண்ணாக வேலை பார்க்கிறார். மணமகனோ விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றுகிறார். இப்படி ஒரே பெயர், ஒரே துறை வேலை என இருவருக்கும் இடையே இன்னும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன.

வேற லெவல் சம்பவம்

இந்த ஜோடியின் கதை கடந்த 2016-ம் வருடத்திலேயே தொடங்கிவிட்டது. அப்போது இருவரும் ஒரே வேலைவாய்ப்பு முகாமுக்கு இன்டர்வியூ செல்ல வேண்டியிருந்தது.

அப்போது இன்டர்வியூ எடுப்பவர், "ஜூ சியாசோங்" என்று பெயரை அழைத்ததும், 2 பேருமே ஒரே நேரத்தில் எழுந்து நின்றுள்ளனர். என்னடா இது.. ஒரே பெயரில் 2 பேர் இருக்கிறார்களே என்று அப்போதுதான் இருவருக்குமே தெரியவந்துள்ளது. இப்படித்தான் இருவரும் அறிமுகமாகியிருக்கிறார்கள்.. பிறகு தங்களுக்குள் பேசி பழகியிருக்கிறார்கள்.. இதனிடையே, மணமகனின் சக ஊழியர் ஒருவர் மணமகளின் பழைய வகுப்பு தோழராக இருந்துள்ளார். அவர் மூலமாகவும் இருவருக்கும் அறிமுகம் கிடைத்துள்ளது.

இப்படித் தொடங்கிய பழக்கம், 2019-ம் வருடம் காதலாக மாறியுள்ளது. பல வருடங்களாகக் காதலித்து வந்த இந்த ஜோடி, 2026 மே மாதம் தங்களது திருமணத்தை பதிவு செய்துகொண்டது. தொடர்ந்து அக்டோபர் 6-ம் தேதி குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் திருமண விழாவையும் நடத்தியுள்ளனர்.

குழப்பிய கல்யாண பத்திரிகை

இதில் இன்னொரு ஹைலைட்டும் உள்ளது.. பொதுவாக கல்யாண பத்திரிகையில் மணமகன் பெயர் ஒரு பக்கமும், மணமகள் பெயர் இன்னொரு பக்கமும் இருக்கும். ஆனால், இந்தத் திருமண அழைப்பிதழில் 2 இடங்களிலும் ஒரே பெயரை பார்த்த உறவினர்கள் குழம்பிவிட்டார்களாம்..

ஏதோ பிரிண்டிங் மிஸ்டேக் என்று நினைத்திருக்கிறார்கள்.. அதற்குபிறகுதான், மணமகன், மணமகள் இருவரது பெயரும் உண்மையிலேயே ஒன்றுதான் என்பது தெரியவந்ததும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

திருமணம் பதிவு செய்யும்போதும் இதே பெயர் விவகாரம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சொத்து தொடர்பான ஆவணங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய முயன்றபோதும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதிகாரிகள் கையாலேயே, அந்த விவரங்களை திருத்தி ஆவணங்களைச் சரிசெய்துள்ளனர்.

விதி இணைத்த ஜோடி?

2 பேரும் ஒரே பெயர் என்பதுடன், 2 பேருமே ஒரே துறையில் வேலை பார்ப்பது, முதல் சந்திப்பிலேயே ஒரே பெயரால் கவனம் ஈர்த்தது என இந்தக் காதல் கதையில் ஏகப்பட்ட ஒற்றுமைகள் நிறைய இருக்கின்றன... இதையெல்லாம் பார்த்த நெட்டிசன்கள், "இது வெறும் தற்செயல் இல்லை.. விதி இணைத்த ஜோடி" என்று சொல்லி மணமக்களை வாழ்த்தி கொண்டிருக்கிறார்கள்.

ஒரே பெயரில் தொடங்கிய அறிமுகம், காதலாக வளர்ந்து இப்போது திருமணத்தில் முடிந்திருக்கிறது. பெயரைப் பார்த்து ஆரம்பத்தில் குழம்பிய உறவினர்களுக்கே இப்போது இந்த ஜோடியின் கதை ஒரு மறக்க முடியாத நினைவாக மாறிவிட்டது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+