"என்னை இந்த கதி பண்ணிட்டானே.. அலறிய பெண்".. ஓடும் ஃபிளைட்டின் கண்ணாடியை உடைத்து.. ஒரே திகில்
காதல் தோல்வியால் போதையில் பெண் பயணி விமானத்தில் கலாட்டா செய்தார்
பெய்ஜிங்: சீனாவில் ஒரு கூத்து நடந்துள்ளது. அதாவது ஓடும் விமானத்தில் கலாட்டா செய்தார் ஒரு குடிகார பெண் பயணி, விமானத்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்கி விட்டனர்.
குடிகாரர்களால் எங்குதான் பிரச்சினை இல்லை.. வீட்டில், ரோட்டில், ரயிலில், பஸ்ஸில் என்று பார்த்தால் இப்போது விமானத்திலும் அதிகரித்து விட்டது. குடித்து விட்டாலே புத்தி மங்கிப் போய் விடுகிறது. என்ன செய்கிறோம் என்ற உணர்வு கூட அதுகளுக்கு வருவதில்லை.

இந்த நிலையில்தான் சீனாவில் ஒரு குடிகார கலாட்டா அரங்கேறியுள்ளது. அது ஓடும் விமானத்தில் நடந்ததால் அத்தனை பேரும் ஆடிப் போய் விட்டார்கள். இதனால் விமானத்தையே கீழே இறக்க நேரிட்டு விட்டதாம்.
ஸினிங் என்ற ஊரிலிருந்து கிழக்கு சீனாவில் உள்ள யான்செங் என்ற ஊருக்கு அந்த விமானம் கிளம்பியுள்ளது. விமானத்தில் ஒரு பெண் பயணி விமானம் கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே கலாட்டாவில் குதித்துள்ளார். அவர் நன்றாக குடித்துள்ளார். குடி போதையில், தாறுமாறாக நடக்க ஆரம்பித்துள்ளார். விமானத்தை நிறுத்துமாறு கத்திக் கூச்சலிட்டுள்ளார். அதே வேகத்தில் கையில் இருந்த பொருளால் கண்ணாடியை உடைத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி ஏற்பட்டது. உடனே விமான ஊழியர்கள் அந்தப் பெண்ணை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் விமானி ஸென்ஸோ என்ற ஊரில் அவசரமாக விமானத்தை தரையிறக்கினார். போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்து அந்தப் பெண்ணைக் கைது செய்து கூட்டிச் சென்றனர்.
விசாரணையில் அந்த 29 வயதுப் பெண்ணுக்கு காதல் தோல்வியாம். அதனால் மனம் உடைந்து போய் விட்டாராம். இப்படி பண்ணிட்டானே என்று காதலனை நினைத்துப் புலம்பியுள்ளார். அந்த புலம்பல்தான் விமானத்தில் கலாட்டாவாக மாறி விட்டதாம். விமானத்தில் ஏறியது முதலே அவர் அழுது கொண்டிருந்தாராம். பின்னர் சீட்டை போட்டு அடித்துள்ளார். அதன் பிறகுதான் ஜன்னல் கண்ணாடியை உடைத்து விட்டார். நல்ல வேளையாக கண்ணாடியின் முதல் லேயர் மட்டுமே உடைந்தது. மொத்தமாக உடைந்திருந்தால் விமானம் பேராபத்தை சந்தித்திருக்கும்.
அவர் குடித்திருந்தது சீனாவின் நாட்டுச் சரக்கான பைஜு என்ற மதுவாம். அது உள்ளே போனால் போதை நன்றாக ஏறி விடுமாம். நம்ம ஊர் சாராயம் போல இதுவும் போதை அதிகமாக இருக்குமாம். அளவுக்கு அதிகமாக இதை அவர் குடித்துள்ளாராம். நல்ல வேளையாக இவரால் விமானத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications