சிறு வயது முதல் ஐபோன் வாங்க ஆசை.. ஒரு கிட்னியை விற்ற சீன இளைஞர்.. உயிருக்கு போராடும் அவலம்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சிறு வயது முதல் ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசையால் ஆன்லைன் கள்ளச்சந்தையில் சீன இளைஞர் ஒருவர் தனது கிட்னியை விற்று பணம் பெற்றது தெரிய வந்தது.

சீனாவில் அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்தவர் 25 வயதான வாங் ஷாங்கன். சிறு வயதிலிருந்தே ஐபோனை வாங்க வேண்டுமென்ற கனவும் ஆசையும் இருந்து வந்தது.

ஆனால் அத்தகைய விலை மதிப்பான போனை வாங்க அவரிடம் பணம் இல்லை. எனினும் கனவை நனவாக்க என்ன செய்யலாம் என தவித்து கொண்டிருந்த போதுதான் அவருக்கு சில கெட்ட சேர்க்கைகள் சேர்ந்தன.

வலது கிட்னி

வலது கிட்னி

இவர்கள் மூலம் ஆன்லைன் கள்ளச்சந்தையில் கிட்னியை வாங்கும் நண்பர்களின் அறிமுகம் வாங்கிற்கு கிடைத்தது. மேலும் இரு கிட்னிகள் தேவையில்லை, ஒரு கிட்னி இருந்தாலே உயிர் வாழ முடியும். எனவே வலது கிட்னியை விற்று விடு என நண்பர்கள் வாங்கை உசுப்பேற்றி விட்டனர்.

நல்லது கெட்டது தெரியாத வயசு

நல்லது கெட்டது தெரியாத வயசு

இந்த சம்பவம் நிகழ்ந்த போது அவருக்கு 17 வயது என்பதால் நல்லது கெட்டதை பிரித்து பார்க்கத் தெரியாத வாங், கிட்னி போனாலும் பரவாயில்லை, ஐபோன் வாங்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டார். இதனால் தனது வலது கிட்னியை 3,273 அமெரிக்க டாலர்களுக்கு விற்றுவிட்டார்.

ஒரு கிட்னி போதும்

ஒரு கிட்னி போதும்

அந்த நண்பர்களும் அறுவை சிகிச்சை மூலம் கிட்னியை பெற்று கொண்டனர். அவர்கள் கொடுத்த பணத்தில் ஐபாட் 2, ஐபோன் 4 வாங்கியுள்ளார் வாங். இந்த நிலையில் சில நாட்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த வாங், உயிர் வாழ ஒரு கிட்னியே போதும் என மற்ற நண்பர்களுக்கு அறிவுறுத்தி வந்தார்.

9 பேர் கைது

9 பேர் கைது

இந்த நிலையில் அவரது இடது கிட்னியில் தொற்று ஏற்பட்டுவிட்டது. இதை கவனிக்காமல் விட்ட வாங்கின் உடல்நிலை மோசமடைந்தது. இதுகுறித்து வாங்கிடம் அவரது தாயார் விசாரித்ததில் கிட்னி விற்ற விவகாரத்தை தெரிவித்தார். இதையடுத்து வாங்கின் தாய் அளித்த புகாரின் பேரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கூடா நட்பு

கூடா நட்பு

ஆனால் வாங் ஒரு நாள் டயாலிசிஸ் செய்யாமல் விட்டாலும் உயிருக்கே ஆபத்தாக முடியும் நிலையில் உள்ளார். இதற்குத்தான் கூடா நட்பு கேடாய் முடியும் என்பார்கள். ஆசைகள் இருக்கலாம், அதை அடைய நல்ல வழியை தேர்வு செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு இது போன்ற வழியில் சென்றால் இழப்புகள் அதிகம்தான்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+