அடடா அடடா ரோடு பூராம் சாக்லேட்டா ஓடுதே.. டேங்கர் லாரி கவிழ்ந்ததால் விபத்து.. போலந்தில் சுவாரஸ்யம்!
போலந்தில் ஏற்பட்ட சாலை விபத்து காரணமாக, சாலை முழுக்க சாக்லேட் கொட்டப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

போலந்து: போலந்தில் ஏற்பட்ட சாலை விபத்து காரணமாக, சாலை முழுக்க சாக்லேட் கொட்டப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
டேங்கர் லாரி ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் இருந்த 12 டன் சாக்லேட் குவியல் மொத்தமும் சாலையில் கொட்டி இருக்கிறது. இதனால் அந்த சாலை மொத்தமாக பாதிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சாலையில் கொட்டி இருக்கும் சாக்லேட்டுகளை வைத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த விபத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இதனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
|
சாலை விபத்து
போலந்தில் இருக்கும் வார்ஸாவ் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெரிய டேங்கர் லாரி ஒன்று நேற்று இரவு விபத்துக்கு உள்ளாகி உள்ளது. சாலையில் வரும் போது, லாரியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, லாரி சறுக்கிக் கொண்டு சென்றுள்ளது. பின் கடைசியாக, சாலை தடுப்புகளை மோதி மொத்தமாக சாலைக்கு நடுவே விழுந்துள்ளது,
|
முழுக்க முழுக்க சாக்லேட்
இந்த லாரி டேங்கரில் முழுக்க முழுக்க சாக்லேட் கலவை இருந்துள்ளது. மொத்தமாக, திரவ நிலையில் இந்த 12 டன் சாக்லேட் நிரப்பப்பட்டுள்ளது. இந்த லாரி கவிழ்ந்த உடன் மொத்த சாக்லேட் தரையில் சிதறி ரோட்டில் ஓடியுள்ளது. இதனால் இந்த சாலை உடனடியாக மூடப்பட்டது. சாலையின் இரண்டு பக்கமும் இந்த சாக்லேட் ஆறு ஓடி இருக்கிறது.
|
மொத்தமாக உறைந்து போனது
அதோடு, இந்த 12 டன் சாக்லேட் குவியல் சாலையில் ஓடியவுடன் உறைந்து போய் இருக்கிறது. மொத்தமாக வெயில் வரவர சாலையில் கட்டியாகி இறுகி உள்ளது. இதனால் எளிதாக முடியவேண்டிய சாலை சீரமைப்பு பணி 8 மணி நேரம் இழுத்து இருக்கிறது. அந்த லாரியும் சாலையிலேயே சாக்லேட்டுடன் ஒட்டிக் கொண்டு இறுகி இருக்கிறது. இதனால் அந்த சாக்லேட் நிறுவனத்திற்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மோசமானது
மொத்தமாக நேற்று இரவில் இருந்து 8 மணி நேரமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சாலை போலந்தில் முக்கியமான நகரங்களை இணைக்கும் சாலை ஆகும். நான்கு வழி சாலையில் எல்லா பகுதிகளையும் இந்த சாக்லேட் பிடித்துவிட்டதால், இரண்டு பக்கமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஒட்டி இருக்கும் சாக்லேட்டை எடுக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications