For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்கள் தொகையை குறைக்கும் எபோலா: ட்வீட் போட்டு ஸ்டுபிட், இடியட்னு திட்டு வாங்கிய பாடகர்

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: எபோலா மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதமாக உள்ளது என்று ஆர் அன்ட் டி பாடகர் கிறிஸ் பிரவுன் ட்வீட் போட்டு பலரிடம் திட்டு வாங்கியுள்ளார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். எபோலா வைரஸ் பரவும் வேகத்தை பார்த்து உலக சுகாதார அமைப்பு பிற நாடுகளை எச்சரித்துள்ளது.

இந்நிலையில் எபோலா குறித்து அமெரிக்க பாடகர் கிறிஸ் பிரவுன்(25) ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

எபோலா

எனக்கு தெரியவில்லை... ஆனால் இந்த எபோலா மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதமாக உள்ளது என்று நினைக்கிறேன் என கிறிஸ் பிரவுன் ட்வீட் செய்துள்ளார்.

திட்டு

திட்டு

கிறிஸ் பிரவுன் ட்வீட் போட்ட மூன்றே நிமிடத்தில் அவரை திட்டி பலர் ட்வீட் போட ஆரம்பித்துவிட்டனர்.

இடியட்

இடியட்

கிறிஸ் பிரவுன் ஒரு முட்டாள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

முயற்சி

முயற்சி

எபோலா மக்கள் தொகையை குறைக்கிறதாம். அப்படி என்றால் கிறிஸ் பிரவுன் அதை முயற்சி செய்யலாமே என காமெடி நடிகர் வாரன் ஹோல்ஸ்டெய்ன் ட்வீட் செய்துள்ளார்.

ஸ்டுபிட்

ஸ்டுபிட்

ஸ்டுபிட் மரபணு கிறிஸ் பிரவுனில் மிகவும் சக்திவாய்ந்ததாக உள்ளது என்று பேராசிரியர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

English summary
R&B singer Chris Brown has revealed that Ebola, which has killed more than 4000 people in West Africa, is a kind of population control.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X