நன்றி கடவுளே.. நன்றி நர்ஸுகளே... முதுகு ஆபரேஷன் முடிந்ததும் ஸ்டேட்ஸ் போட்ட கிறிஸ் கெய்ல்!
ஜமைக்கா: முதுகு வலிக்கான ஆபரேஷனிலிருந்து மீண்டுள்ளார் மேற்கு இந்தியத் தீவுகளின் அதிரடி கிரிக்கெட் புயல் கிறிஸ் கெய்ல். சில மாதம் ஓய்வெடுக்கப் போகும் அவர் தான் நலம் பெற்று வருவதற்காக பிரார்த்தித்த அனைவருக்கும், மருத்துவமனையில் தன்னிடம் அடிக்கடி ஜோக் சொல்லி தன்னை உற்சாகமாக வைத்துக் கொண்ட நர்ஸுகளுக்கும் நன்றி கூறியுள்ளார்.
முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார் கிறிஸ் கெய்ல். இதுதொடர்பாக டாக்டர்களிடம் அவர் ஆலோசனை கேட்டபோது அறுவைச் சிகிச்சைக்கு டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.
இதையடுத்து 3 - 4 மாதங்களுக்கு தான் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருக்கப் போவதாகவும், முதுகு வலிக்கான அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்தார்.

ஜமைக்காவில் ஆபரேஷன்
இதையடுத்து அவருக்கு ஜமைக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நடந்தது. அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
|
நன்றி நன்றி
இதையடுத்து டிவிட்டரிலும்,. பேஸ்புக்கிலும் ஆபரேஷன் முடிந்து விட்டதாக கூறி டிவிட் போட்டுள்ளார் கெய்ல். அதில் தனக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.

கடவுளே..
இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவிட்டில், முதலில் கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எல்லாம் நல்லபடியாக போனது. டாக்டர் கிங்ஸ்லி சின்னுக்கும் அவரது குழுவுக்கும் நன்றி. அவர்களால்தான் இது சாத்தியமானது. டாக்டர் ஜேசன், டாக்டர் பென்ங்கிள், செய்லி ஆகியோருக்கும் நன்றி. எனது கேர்ள்பிரண்ட் நதாஷா, தம்பி லின்டன், நண்பன் நிக்கோலஸ் ஆகியோரைப் பார்த்தேன். அனைவருக்கும் நன்றி. மயக்கமாக இருக்கிறது, பிறகு பேசுகிறேன் என்று கூறியுள்ளார் கெய்ல்.

அந்த நர்ஸ் நல்லா ஜோக் சொன்னார்
டிவிட்டரில் அவர் போட்டுள்ள இன்னொரு டிவிட்டில் தன்னை நன்றாகப் பார்த்துக் கொண்ட நர்ஸுகளுக்கும் பெயர் குறிப்பிட்டு தேங்ஸ் சொல்லியுள்ளார் கெய்ல். இதுகுறித்து அவர் கூறுகையில், இரவு டூட்டு நர்ஸ்களிடமிருந்து சிறப்பு பராமிப்பு கிடைக்கிறது. குறிப்பாக ஓஜோல்லம். செமையாக ஜோக் சொல்கிறார். ப்யூர் ஜோக்ஸ்தான். எல்லோரும் சேர்ந்து என் மூளையை பறிக்கப் பார்க்கிறார்கள் என்று ஜாலியாக குறிப்பிட்டுள்ளார். (உடம்புக்கு முடியாட்டியும் கெய்ல் புல் பார்ம்தான் போல எப்பவுமே)

டிசம்பரில்தான் விளையாட வருவார்
ஆபரேஷனுக்குப் பின்னர் நன்கு ஓய்வெடுக்கப் போகும் கிறிஸ் கெய்ல் டிசம்பர் மாத வாக்கில்தான் விளையாட வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை நல்ல ஓய்வை அவர் எடுக்கப் போகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications