ஜஸ்ட் 50 தான் ஆகப்போகுது, அதுக்குள்ள என்ன அவசரம்?: மாடல் சின்டி கிராபோர்ட்
நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த சூப்பர் மாடல் சின்டி கிராபோர்ட் மாடலிங்கில் இருந்து முற்றிலும் ஓய்வு பெறப் போவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் சூப்பர் மாடலான சின்டி கிராபோர்ட். 2 குழந்தைகளுக்கு தாயான அவர் வரும் 20ம் தேதி தனது 50வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். 30 ஆண்டுகளாக மாடலிங் செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது 50வது பிறந்தநாளோடு மாடலிங்கில் இருந்து ஓய்வு பெறப் போவதாக தெரிவித்தார். சின்டியின் 14 வயது மகள் கியாவும் தாயின் வழியில் மாடலிங் செய்து வருகிறார்.
ஓய்வு குறித்து சின்டி மீண்டும் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,
Headlines don't always tell the whole story. Thanks for the love everyone — but more here: https://t.co/ggsyhyAZCj pic.twitter.com/UONuOh78jH
— Cindy Crawford (@CindyCrawford) February 1, 2016
ஒவ்வொரு ஆண்டும் நான் ஓய்வு பெறுவதாக என் குழந்தைகளிடம் கூறுவேன். இது என் குடும்பத்தில் ஒரு ஜோக்காகிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் புதிய வாய்ப்புகள் என்னை தேடி வரும். வியாபாரம், நண்பர்கள், குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த விரும்புவது உண்மை தான். நான் எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை.
கடந்த 30 ஆண்டுகளாக ஃபேஷன் துறையில் இருப்பதை விரும்புகிறேன். உங்களின் ஆதரவுக்கு நன்றி. 2016ம் ஆண்டில் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள மகிழ்ச்சியாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications