மைக்கை ஆப் செய்யாமல் "காஸ்" விட்ட ராஸ்... விழுந்து விழுந்து சிரித்த ராச்சல்!
டெக்ஸாஸ்: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஜார்ஜ்டவுன் நகராட்சி கவுன்சில் கூட்டத்தின்போது, டாய்லெட்டுக்குப் போன மேயர் தனது சட்டையில் பொருத்தப்பட்டிருந்த மைக்கை ஆப் செய்யாமலேயே சிறுநீர் கழிக்கப் போனார். அப்போது அவர் 'காஸ்' விட்டது நகராட்சி கவுன்சில் அரங்கு வரைக்கும் கேட்டு அனைவரையும் அதிர வைத்தது.
மேயர் 'காஸ்' விட்ட சத்தத்தை மைக்கில் கேட்டு பெண் கவுன்சிலர் ராச்சல் ஜான்ரோ விழுந்து விழுந்து சிரித்தார்.

ஜார்ஜ்டவுன் நகர மேயராக இருப்பவர் டேல் ராஸ். இவரது தலைமையில் கவுன்சில் கூட்டம் நடந்து வந்தது. அதில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நடுவே ராஸ் டாய்லெட்டுக்குச் சென்றார். இதையடுத்து ராச்சல் பேசத் தொடங்கினார்.
அவர் பேச ஆரம்பித்த சில விநாடிகளிலேயே 'டர் புர்''ரென்று சத்தம் அரங்கில் மைக் மூலமாக கேட்டது.. அது வேறு ஒன்றுமில்லை. டாய்லெட்டுக்குப் போன மேயர் "ராஸ்" விட்ட 'காஸ்' சத்தம்தான் அது. டாய்லெட்டுக்குப் போன அவர் மைக்கை ஆப் செய்ய மறந்து விட்டார். இதனால் அவர் டாய்லெட்டில் செய்ததெல்லாம் லைவாக ஒலிபரப்பாகி விட்டது.
சத்தமாக காஸ் விட்ட அவர் பிளஸ் அவுட் செய்த சத்தமும் சற்று பலமாகவே கேட்டு காதைக் கிழித்தது. அதை விட காமெடி.. எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டு கையைக் கழுவாமல் அவர் வந்ததுதான்.
இத்தனை சத்தத்தையும் கேட்டு முதலில் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்த கவுன்சிலர் ராச்சல் அதன் பிறகு அடக்க மாட்டாமல் வாய் விட்டுச் சிரிக்க ஆரம்பித்தார். விழுந்து விழுந்து சிரித்தார். அவர் சிரித்துக் கொண்டிருந்தபோது மேயர் ராஸ் கம்பீரமாக நடை போட்டு சீட்டுக்கு வந்தார். ராச்சல் ஏன் சிரிக்கிறார் என்று தெரியாமல் அவர் பார்க்க, அவருக்கு அருகில் இருந்தவர் நடந்ததை விளக்க மேயருக்கு முகத்தில் வெட்கம் பிடுங்கித் தின்றது!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications