கடைசியாக ஒருமுறை நிலவை பார்த்துக்கோங்க.. காத்திருக்கும் ஆபத்து! விஞ்ஞானிகள் ஷாக்
வாஷிங்டன்: 2024 YR4 என்கிற விண்கல் பூமியை தாக்கும் என்று பரவலாக பேசப்பட்டிருந்தது. ஆனால், தொடர் ஆய்வுகளுக்கு பிறகு பூமிக்கு ஆபத்து இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், இந்த விண்கல்லால் நிலவுக்கு ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த விண்கல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது இந்த விண்கல்லால் பூமிக்கு ஆபத்து இருப்பதாக பேசப்பட்டது. ஆனால், அடுத்த ஆய்வுகளில் ஆபத்து பூமிக்கு இல்லை. நிலவுக்கு என்று தெரிய வந்திருக்கிறது.

கடந்த ஆண்டு இறுதியில் சிலியில் இருந்த நாசாவின் ஆய்வு மையத்தில் இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ சுமார் 11 மாடி கட்டிடத்தின் உயரத்தில் இக்கல் இருக்கிறது. வியாழன் கோளுக்கும், செவ்வாய் கோளுக்கும் இடையே விண்கல் குவியல்கள் இருக்கின்றன. இதிலிருந்து விண்கற்கள் சில சூரியனை நோக்கி வரும். இப்படி வரும்போது அது பூமி மீது மோதுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு விண்கல்லாகத்தான் 2024 YR4 பார்க்கப்பட்டது.
எனவே எல்லா தொலைநோக்கிகளும் இந்த கல்லை நோக்கி திருப்பப்பட்டன. விண்வெளியில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கூட இக்கல்லை நோக்கி திருப்பப்பட்டது. ஏராளமான ஆய்வுகள், கணக்கீடுகள் செய்யப்பட்டது இக்கல் பூமி மீது மோத 3% வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த ஆய்வுகளில் இந்த சதவிகிதம் 2 என்றும் 1 என்றும் குறைக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் ஆய்வில் இக்கல் பூமியை தாக்காது என்று உறுதி செய்யப்பட்டது.
பூமி தப்பித்துவிட்டாலும், நிலவுக்கு ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அப்பீல்டு இயற்பியல் ஆய்வகம் இது தொடர்பாக ஆய்வு செய்து, விண்கல் நிலவை மோத 1.7 முதல் 2% வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இந்த மோதல் மூலம் நிலவில் பெரிய பாதிப்பு ஏற்படாது. கொஞ்சம் பெரிய சைஸ் பள்ளம் ஏற்படும். தூசி மணல் படலம் பரவும். ஆனால் அதை தாண்டி பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நிலவின் விட்டம் 3,474 கிமீ. நிலவின் மொத்த எடை 7.35 × 10¹⁹ கிலோகிராம். ஆனால் விண்கல்லின் எடை மிக சிறியது. எனவே, இது நிலவின் பாதையை எதுவும் மாற்றாது. சிம்பிளாக சொல்வதெனில் விண்கல்லின் மோதல் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறுகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications