"உங்கள் சகோதரன்தான் முதலமைச்சராக இருக்கிறான் என்ற உரிமையோடு வாங்க”.. ஜெர்மனியில் பேசிய ஸ்டாலின்
டசெல்டோர்ப்: தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். டசெல்டோர்ப் நகரில் நடக்கும் உயர்நிலை முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார் ஸ்டாலின்.
இன்று ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு லண்டன் புறப்படுகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அங்கு வரும் 7 ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

ஜெர்மனியில் ஸ்டாலின்
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் சனிக்கிழமை காலை 9 மணிக்கு விமானத்தில் சென்னையில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார். முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினின் செயலர்கள், அமைச்சர் டிஆர்பி ராஜா, பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் சென்றனர். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ஜெர்மனி சென்றடைந்தார் ஸ்டாலின்.
அங்கு வடரைன் வெஸ்ட்பாலியா மாகாணத்தின் முதல்வர் ஹென்ட்ரிக் வூஸ்ட் சார்பில், அவரது அரசின் துாதரக விவகாரங்கள் மற்றும் அரசுமுறை வரவேற்பு பிரிவைச் சேர்ந்த அன்யா டி வூஸ்ட், பெர்லினில் உள்ள இந்திய துாதரகத்தின் பொறுப்பாளர் அபிஷேக் துபே, பிராங்க்பர்ட்டில் உள்ள இந்திய துணை துாதரகத்தின் பொறுப்பு துணைத்துாதர் விபாகாந்த் ஷர்மா ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை வரவேற்றனர்.
இன்று முக்கிய மாநாடு
மேலும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஜெர்மனி வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழர்களின் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், தமிழக முதல்வர் ஸ்டாலினை உற்சாகத்துடன் வரவேற்றனர். ஜெர்மனியில் தமிழர்களின் பாசத்தைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்ததாக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். தமிழர்களின் சாதகமான அம்சங்களை எடுத்துக் கூறி முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதை உறுதி செய்வோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், "வேர்களை மறக்காத ஜெர்மனி நாட்டுத் தமிழ் உறவுகள் அடைந்துள்ள உயரம் கண்டு உள்ளம் பூரித்தேன். அவர்கள் அளித்த வரவேற்பின் ஆரவாரத்தில் அகம் குளிர்ந்தேன். தமிழ்நாட்டுக்கு வாருங்கள், நமது திராவிட மாடல் அரசு அமைத்து வரும் தமிழர் தொன்மையின் பண்பாட்டுச் சின்னங்களைக் காணுங்கள்! உங்கள் சகோதரன்தான் முதலமைச்சராக இருக்கிறான் என்ற உரிமையோடும் நம்பிக்கையோடும் வந்து முதலீடு செய்யுங்கள், முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள்!" என பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாடு - ஜெர்மனி உறவு
முதல்வர் ஸ்டாலின் இன்று முதலீட்டாளர்களைச் சந்திக்கிறார். இன்று டசெல்டோர்ப் நகரில் நடக்கும் உயர்நிலை முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். இந்த மாநாட்டில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் துறை தலைவர்களுடன் கலந்துரையாடுகிறார். இதில், முதலீட்டு அறிவிப்புகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் முதலீடு செய்யவும், தங்கள் தொழில் திட்டங்களை விரிவுபடுத்தவும் விரும்பும் முதலீட்டாளர்களை, முதல்வர் தனியே சந்தித்து பேசவும் உள்ளார். தமிழகத்திற்கும், ஜெர்மனியின் மிகவும் தொழில்மயமான மாகாணமான வடரைன் வெஸ்ட்பாலியாவுக்கும் இடையே, இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் ஒரு பகுதியாக, அம்மாகாண முதல்வர் ஹென்ட்ரிக் வூஸ்ட்டை ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.
லண்டன் செல்லும் ஸ்டாலின்
இதைத்தொடர்ந்து ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு, செப்டம்பர் 1 ஆம் தேதியான இன்று இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின். நாளை செப்டம்பர் 2 ஆம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று, தொழில்முனைவோரை சந்திக்கிறார். 3 ஆம் தேதி லண்டனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்று, தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார்.
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அயலக தமிழர் நலவாரியம் சார்பில் 4 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்று, அங்கு பெரியார் படத்தை திறந்து வைக்கிறார். 6 ஆம் தேதியும் அயலக தமிழர் நலவாரிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார். இங்கிலாந்தில் இருந்து 7 ஆம் தேதி புறப்பட்டு, செப்டம்பர் 8 ஆம் தேதி காலை சென்னை திரும்புகிறார்.
-
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications