ஸ்டைலா.. கெத்தா.. டிரைவர் இல்லாத ஆட்டோமேட்டிக் ஜாகுவார் காரில் பறக்கும் முதல்வர் ஸ்டாலின்! வீடியோ!

Subscribe to Oneindia Tamil

சான் பிரான்சிஸ்கோ: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாகச் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு டிரைவரே இல்லாத ஆட்டோமேட்டிக் ஜாகுவார் காரில் பயணம் செய்துள்ளார். முதல்வர் ஸ்டாலின், டிரைவர் இல்லாத காரில் கெத்தாக அமர்ந்து பயணம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார். அதன்படி ஏராளமான நிறுவனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வருகின்றன. மேலும் பல முன்னணி நிறுவனங்களின் தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு ஈர்க்கும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

mk stalin america tamil nadu

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, சான் பிரான்சிஸ்கோ என்ற ஊரில் இருக்கிறேனா, சென்னையில் இருக்கிறேனா என்று சந்தேகப்படுகிற அளவிற்கு, தமிழ்நாட்டில் இருக்கிற உணர்வையே எனக்கு நீங்கள் இப்போது ஏற்படுத்திவிட்டீர்கள் என நெகிழ்ந்து போய் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

இந்நிலையில் ஜாகுவார் நிறுவனத்தின் ஓட்டுநரே இல்லாத தானியங்கி காரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பயணம் செய்துள்ளார். டிரைவர் இல்லாத ஆட்டோமேட்டிக் காரில் கெத்தாக அமர்ந்து பயணம் செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இன்று சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து சிகாகோ செல்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

செப்டம்பர் 11 வரை சிகாகோ நகரில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். குறிப்பாக அங்கு, பார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் பேசுகிறார் ஸ்டாலின்.

செப்டம்பர் 7 ஆம் தேதி 'வணக்கம் அமெரிக்கா’ என்ற பெயரிலான அயலக தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதில் பல்வேறு தொழிலதிபர்கள், சர்வதேச தமிழ் பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். மீண்டும் செப்டம்பர் 12 ஆம் தேதி புறப்பட்டு சென்னை திரும்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+