ஏ டண்டணக்கா.. டணக்குணக்கா.. குத்தாட்டம் போடும் வெள்ளைக் கிளி – வைரலாகும் வீடியோ!
Subscribe to Oneindia Tamil
லண்டன்: லண்டனில் குத்துப்பாட்டுக்கு செமையாக நடனம் ஆடும் கிளி ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றது.
"ராக் அண்ட் ரோல் இசையின் மன்னன்" எல்விஸ் ப்ரெஸ்லியின் இசைக்கு பல ரசிகர்கள் அடிமை. அந்த வெறித்தனமான ரசிகர்கள் பட்டியலில் காக்கட்டூ என்ற பறவையும் புதிதாக சேர்ந்துள்ளது.

அவரது இசைக்கு அந்த பறவை குத்தாட்டம் போடும் வீடியோ யூடியூபில் மரண ஹிட்டாகியுள்ளது.
வீடியோவில் 2 காக்கட்டூகளின் (ஒரு வகை கிளி) உரிமையாளர் ஒருவர் கிடார் இசைத்தபடி எல்விஸ் பிரெஸ்லியின் பாடலை பாடுகிறார்.
அதில் ஒரு காக்கட்டூ எந்த உணர்வுமின்றி இருக்க, மற்றொரு காக்கட்டூ முதலில் இசைக்கெற்றபடி தனது தலையை அழகாக அசைக்கிறது. சற்று நேரத்தில் தனது தோகையை சிலுப்பியபடி உற்சாக நடனத்தில் பிய்த்து உதறுகின்றது.












Click it and Unblock the Notifications