ஜெர்மனி விமான விபத்து: இறுதி நிமிடங்களில் நடந்தது என்ன?- திக் திக் தகவல்
பாரீஸ்: ஜெர்மன்விங்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு கேப்டன் மற்றும் துணை விமானி பேசியவற்றின் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் இருந்து ஜெர்மனியில் உள்ள டுசல்டார்ப் நகருக்கு சென்ற ஜெர்மன்விங்ஸ் விமானம் பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 150 பேர் பலியாகினர். விசாரணையில் துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28) விமானத்தை திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கியது தெரிய வந்தது.
இந்நிலையில் மீட்கப்பட்ட விமானத்தின் கருப்பு பெட்டியில் விமானம் விபதுக்குள்ளாகும் முன்பு நடந்த உரையாடல் பதிவாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு,

கேப்டன் பேட்ரிக்: பார்சிலோனாவில் கழிவறைக்கு செல்ல நேரம் இல்லை. நான் கழிவறைக்கு செல்ல வேண்டும்.
லுபிட்ஸ்: நீங்கள் சென்று வாருங்கள்.
கேப்டன்: விமானம் நல்ல உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது. டுசல்டார்ப் நகரில் தரையிறங்க வேண்டும்.
லுபிட்ஸ்: நீ்ங்கள் கழிவறைக்கு சென்று வாருங்கள். விமானத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்.
கேப்டனை கழிவறைக்கு செல்லுமாறு லிபிட்ஸ் தான் வலியுறுத்தியுள்ளார். விமானி அறையை விட்டு கேப்டனை வெளியேற்றுவதிலேயே துணை விமானி குறியாக இருந்துள்ளார்.
கேப்டன் கழிவறைக்கு சென்ற பிறகு லுபிட்ஸ் விமானி அறை கதவை பூட்டிவிட்டார். கதவை திறக்குமாறு கேப்டன் மீண்டும் மீண்டும் கூறியும் லுபிட்ஸ் கண்டுகொள்ளவில்லை. கேப்டன் கோடாரியால் கதவை இடித்தும் திறக்க முடியவில்லை.
விமானம் மலையில் மோத சில நொடிகள் இருக்கையில் பயணிகள் அலறியுள்ளனர். ஆனால் லுபிட்ஸோ இறுதி வரை எந்த சப்தமும் போடாமல் அமைதியாக இருந்துள்ளார். லுபிட்ஸுக்கு விமானத்தை இயக்கும் அளவுக்கு உடல் தகுதி இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதையும் மீறி அவர் விமானத்தை இயக்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications