கோட் ரெட்.. கலிபோர்னியா தீ! ஐநா எச்சரித்தபடியே நடக்குது! இனி பேரிடர்களுக்கு மத்தியில்தான் வாழ்க்கை?
கலிபோர்னியா: உலக அளவில் வெப்பம் அதிகரித்து வருவதால் இனி பேரிடர்களுக்கு மத்தியில்தான் வாழ்க்கை இருக்க போவதாக ஐநா எச்சரித்து இருந்தது. ஐநாவின் எச்சரிக்கை நாளுக்கு நாள் பலிக்க தொடங்கி உள்ளது.
உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. தீவிரவாதம்.. சர்வாதிகாரம்.. வேலையின்மை.. வறுமை ஆகியவை உலகின் மிகப்பெரிய பிரச்சனைகளாக தோன்றினாலும், அதை விட பெரிய பிரச்சனை ஒன்றை நாம் சத்தமின்றி எதிர்கொண்டு வருகிறோம். அதுதான் காலநிலை மாற்றம்!

1, ஐநாவும் இந்த காலநிலை மாற்றம் குறித்து கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து இருக்கிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம். இது மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி.
2. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.... கடந்த சில மாதங்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை.
3. அந்த அளவிற்கு உலகம் முழுக்க காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது. இந்த நிலையில்தான் நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக ஐஸ் கட்டிகள் உருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடலில் நீர் மட்டம் வேகமாக உயரும்.இதனால் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து வெள்ளங்கள், புயல்கள் ஏற்படலாம்.
4. இதெல்லாம் எல்லோரும் எதிர்பார்த்த, எதிர்பார்க்கும் அபாயங்கள் என்றாலும், வேறு சில அபாயங்களும் உள்ளன. அதுதான் வைரஸ்கள் வெளியேறுவது! அதாவது ஐஸ் கட்டிகளுக்கும் பல ஆயிரம் ஆண்டுகளாக உறங்கிக்கொண்டு இருக்கும் வைரஸ்கள், இந்த ஐஸ் கட்டிகள் உருகுவதால் வெளியேறும் அபாயம் உள்ளது.
5. வெப்பம் உயர்வதால் மரங்கள் திடீரென தீ பிடித்து காட்டுத்தீ ஏற்படும் அபாயங்களும் கூட உள்ளன.
கலிபோர்னியா தீ:
அந்த வகையில் தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் பல்வேறு பகுதிகள் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயிலேயே இதுதான் மிக மோசமானது என்று அமெரிக்கா வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த காட்டுத் தீ உருவாகி இரண்டு வாரத்திற்கும் அதிகமாகிவிட்டது. இதன் காரணமாக கலிபோர்னியா மாகாணத்தின் முக்கிய பகுதிகள் நாசமாகி இருக்கிறது. இது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தை தாக்குவதற்கு முன்பே நிறுத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பெரும்பாலான இடங்களை இந்த தீ நாசம் செய்து இருக்கிறது. இன்னும் இந்த தீ கட்டுப்படுத்த முடியாமல் பரவிக் கொண்டு இருக்கிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் வரலாற்றில் ஏற்பட்ட இந்த மிக மோசமான தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடிக்கொண்டு உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் இந்த காட்டுத்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பலர் தற்போது தற்காலிக மையங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications