அனுபவம் வேண்டாம்.. BCA, B.Sc முடித்தோருக்கு IT வேலை தரும் Cognizant.. சென்னை - கோவையில் பணி
சென்னை: காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் அனலிஸ்ட் டிரெய்னி (Analyst Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிசிஏ, பிஎஸ்சி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய ஜூன் 30ம் தேதி கடைசி நாளாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத் உள்பட 9 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் தற்போது அனலிஸ்ட் டிரெய்னி (Analyst Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது Freshersகளுக்கான வேலைவாய்ப்பாகும். இதனால் 2025ம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

அதன்படி பார்த்தால் பிசிஏ, பிஎஸ்சி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதில் பிஎஸ்சி என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி (Allied Streams), கணிதம், இயற்பியல், வேதியியல், புள்ளியில், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இவர்கள் 10, பிளஸ் 2, டிப்ளமோ, இளநிலை பட்டப்படிப்பு உள்ளிட்டவற்றில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். டைம் மேனேஜ்மென்ட் ஸ்கில் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனையை தீர்க்கும் திறன், அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், டீமாக சேர்ந்து பணியாற்றும் திறமை உள்ளிட்டவை இருக்க வேண்டும்.
மேலும் பணிக்கு தேர்வாகும் நபர்கள் எந்த ஷிப்ட்டாக இருந்தாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். இரவு பணிக்கு அலோவன்ஸ் வங்கப்படும். Cab வசதி உள்ளது. பிக்அப் - டிராப் வசதி தரப்படும். மொத்தம் 9 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, புனே, கொச்சி, புவனேஸ்வர், இந்தூர் உள்ளிட்ட இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் எந்த இடத்தில் நியமனம் செய்யப்பட்டாலும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஜூன் 30ம் தேதி கடைசி நாளாகும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூன் 30ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பயன்படுத்தி விண்ணப்பம் செய்யலாம்.
இண்டர்வியூவுக்கு செல்வோர் ரெஸ்யூம் , பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வைத்திருக்க வேண்டும. கல்லூரி ஐடி கார்டு, பள்ளி, கல்லூரிக்கான மார்க் ஷீட் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும். பானன் கார்டு இருக்க வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
எஸ்பிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. 7,150 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications