ஜல்லிக்கட்டு.. ஜெர்மனியின் கொலோன் நகரில் நடுங்கும் குளிரில் நின்று குரல் கொடுத்த தமிழர்கள்

ஜெர்மனியின் கொலோன் நகரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

கொலோன்: தமிழர்களஇன் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஜெர்மனியின் கொலோன் நகரில் தமிழர்கள் நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் அணி வகுத்து நின்று தங்களது உணர்வைக் காட்டினர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்று ஜல்லிக்கட்டு. 2014 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டின் மீது உச்சநீதி மன்றம் தடை விதித்தது. தடையை எதிர்த்து தமிழ்நாடு அரசும், தமிழ் மக்களும் தொடர்ந்து சட்டரீதியாகவும், களத்திலும் போராடி வருகிறார்கள்.

Cologne Tamils protest in support of Jallikattu

2017 பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் இந்த சூழ்நிலையில், இந்த வருடமும் தமது பாரம்பரிய பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியாமல் போகுமே என்ற அச்சத்திலும், கவலையிலும் தமிழக மக்கள் மூழ்கி உள்ளனர். எனவே, உச்சநீதிமன்றத்தின் ஜல்லிக்கட்டு மீதான தடையை எதிர்த்து பெரும் போராட்டங்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெடித்து வருகிறது.

தாய் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த போராடும் மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், புலம்பெயர் தமிழர்கள் பல்வேறு நகர்களில் குழுமி தங்களது உணர்வுபூர்வ ஆதரவை அளித்து வருகின்றனர். இந்நிலையில், ஜெர்மனி நாட்டில், கொலோன் நகரில் வசிக்கும் தமிழர்கள். ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஆதரவு கோஷங்களை பதாகைகளில் எழுதி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.

நடுங்கும் குளிரை பொருட்படுத்தாமல், குழந்தைகளோடு வந்து தங்களது ஆதரவை தாய் தமிழக மக்களுக்கு தெரிவித்து, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

Tamils in Cologe, Germany, gathered to support Tamilians and stood for their issues, particularly Jallikattu.

60

ஜெர்மனியின் கொலோன் நகரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர்கள் நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+