முதல்ல ரோடு போடுங்க, அப்புறம்தான் 'அது'... கொலம்பியா பெண்களின் 'செக்ஸ்' ஸ்டிரைக்!
கொலம்பியா: கொலம்பியாவில் பெண்கள் நூதனமான போராட்டத்தில் குதித்துள்ளனர். அதாவது அங்குள்ள சாலைகளை மேம்படுத்தும் வரை செக்ஸ் உறவைத் தவிர்க்கும் ஸ்டிரைக் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் ஆண்கள் வெலவெலத்துப் போயுள்ளனராம்.
கொலம்பியாவின் பர்பகாஸ் என்ற இடத்தில்தான் இந்த நூதன ஸ்டிரைக் நடந்து வருகிறது.
அங்குள்ள சாலைகள் படு மோசமாக இருப்பதாகவும், அதை சரி செய்ய யாருமே நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் இதனால்தான் இந்த ஸ்டிரைக்கை ஆரம்பித்துள்ளதாகவும் கூறியுள்ளனர் பர்பகாஸ் பெண்கள்.

கிராஸ்ட் லெக்ஸ்...
கிராஸ்ட் லெக்ஸ் மூவ்மென்ட் என்ற பெயரில் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

2 வருடங்களில் 2வது ஸ்டிரைக்
கடந்த 2 வருடங்களில் 2வது முறையாக இப்படி ஒரு செக்ஸ் ஸ்டிரைக்கை கொலம்பிய பெண்கள் நடத்துகின்றனர்.

சாலை போடும் வரை.. நோ...
தங்களது பகுதியில் சாலைகளை மேம்படுத்த வேண்டும், சேதமடைந்த சாலைகளுக்குப் பதில் புதிய சாலைகள் போட வேண்டும். அதுவரை செக்ஸ் கிடையாது என்று இந்தப் பெண்கள் அறிவித்துள்ளனர்.

பல மணி நேர பயணம்
இப்பகுதியில் உள்ள சாலைகள் நாட்டின் இதர பகுதிகளை இணைக்கக் கூடிய வகையில் உள்ளது. படு மோசமான இந்த சாலைகளில் பயணிப்பது பெரும் நரகமாகவும் இருக்கிறதாம். மேலும் அருகில் உள்ள மருத்துவமனைக்கோ அல்லது வேறு எங்குமோ செல்ல வேண்டுமானால் 14 மணி நேரம் பிடிக்கிறதாம்.

கூல் பெண்களே கூல்...
பெண்களின் இந்தப் போராட்டத்தால் ஆண்கள் டென்ஷனாகியுள்ளனர். சாலைகளைச் சீர் செய்யுமாறு அதிகாரிகளை அவர்கள் கேட்டு்க கொண்டுள்ளனர். அதிகாரிகளும் நிலைமையின் அவசரத்தை உணர்ந்து சாலைகளை சீரமைப்பதாக உறுதியளித்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications