சிம்புவோட 'வாலு' கிடக்குது.. இந்த ஐசான் 'வால்' செய்யும் மாயாஜாலத்தைப் பாருங்க...!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஒட்டுமொத்த வானியல் ஆர்வலர்களையும் விண்ணை நோக்கி வியந்து பார்க்க வைத்துள்ளது ஒரு வால் நட்சத்திரம்.. அது ஐசான்.

அத்தனை பேரின் 'eyes on' இந்த 'ஐசான்' மீதுதான். அப்படி ஒரு ரகளையை செய்து கொண்டிருக்கிறது இந்த வாலு.

ஐசான் வால் நட்சத்திரத்தின் அபாரமான காட்சிகள் படங்களாக வெளியாகி பிரமிக்க வைக்கிறது. தற்போது இந்த வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கி வருகிறது. மேலும் நெருங்கும்போது அது பொசுங்கிப் பஸ்பமாகி விடும். ஒரு வேளை தப்பிப் பிழைத்தால் ஐசானின் மேலும் சில காலத்திற்கு அதன் வண்ண ஜாலங்களை நாம் கண்டு ரசிக்க முடியும்.

நூற்றாண்டின் வால் நட்சத்திரம்

நூற்றாண்டின் வால் நட்சத்திரம்

இந்த நூற்றாண்டின் வால் நட்சத்திரம் என்ற பெருமை ஏற்கனவே ஐசானுக்குக் கிடைத்து விட்டது.

ச்சும்மா ஜோரா மின்னுதப்பா

ச்சும்மா ஜோரா மின்னுதப்பா

பிரமிக்க வைக்கும் வகையிலான வெளிச்சத்துடன் இந்த வால் நட்சத்திரம் கடந்த சில வாரங்களாக மின்னிக் கொண்டுள்ளது. சூரியனை நெருங்க நெருங்க அதன் பிரகாசமும் பெருகிக் கொண்டே போகிறது.

மெல்லச் சாகும் ஐசான்

மெல்லச் சாகும் ஐசான்

தற்போது இந்த வால் நட்சத்திரத்தின் மையப் பகுதி உடைய ஆரம்பித்து விட்டது. காரணம், சூரியனை நெருங்கி வருவதால்.

குளிர்ச்சியான வால்நட்சத்திரம்

குளிர்ச்சியான வால்நட்சத்திரம்

இந்த வால் நட்சத்திரம் ஐஸ் கட்டி போல மிக மிக குளிர்ச்சியானது. இதன் மையப் பகுதியிலிருந்து கடந்த 2 வாரங்களாக வாயுக்கள் மற்றும் தூசுக்கள் வெளியேறி வருவதால், அதன் பிரகாசம் படு ஜோராக இருந்தது.

உடைய ஆரம்பித்து விட்டது

உடைய ஆரம்பித்து விட்டது

சூரியனை வேகமாக நெருங்கி வருவதால் இந்த வால் நட்சத்திரம் உடைந்து உருக்குலைய ஆரம்பித்துள்ளது. வரும் 28ம் தேதி இது சூரியனுக்கு மிக அருகில் போய் விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அது பொசுங்கி பஸ்பமாகி விடும்.

பிபிசியில் காட்டப் போகிறார்கள்

பிபிசியில் காட்டப் போகிறார்கள்

ஐசான் வால் நட்சத்திரத்தின் அழகுக் காட்சிகளை பிபிசி தொலைக்காட்சியில் 23ம் தேதி ஒளிபரப்பவுள்ளனர்.

ஒரு வேளை தப்பிப் பிழைத்தால்

ஒரு வேளை தப்பிப் பிழைத்தால்

சூரியனுக்கு அருகில் போயும், அது தப்பிப் பிழைத்தால் இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற கண்காட்சியாக இந்த நட்சத்திரம் மாறும்.

சூரியனின் வெப்பத்தால்தான் இப்படி ஒரு பிரகாசம்

சூரியனின் வெப்பத்தால்தான் இப்படி ஒரு பிரகாசம்

சூரியனுக்கு அருகே போய்க் கொண்டிருப்பதால்தான் இந்த வால் நட்சத்திரம் இந்த அளவுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கிறதாம். 28ம் தேதி இந்த வால் நட்சத்திரம், சூரியனிலிருந்து 7 லட்சத்து 24 ஆயிரம் மைல் தொலைவுக்கு நெருங்கி விடும். மேலும் அந்த இடத்தில் வெப்பத்தின் அளவு 2760 சென்டிகிரேடாக இருக்குமாம்.

கொஞ்ச காலத்திற்கு உயிரோடு இருக்க வாய்ப்பு

கொஞ்ச காலத்திற்கு உயிரோடு இருக்க வாய்ப்பு

சூரியனை நெருங்கி வரும் போதிலும் கூட இன்னும் கொஞ்ச காலத்திற்கு ஐசான் தப்பிப் பிழைத்திருக்கும் என்ற நம்பிக்கையில் விண்ணியல் ஆய்வாளர்கள் உள்ளனர்.

பைனாகுலர்.. டெலஸ்கோப் மூலம்

பைனாகுலர்.. டெலஸ்கோப் மூலம்

உலகம் முழுவதும் விண்ணியல் ஆர்வலர்கள், பைனாகுலர்கள், டெலஸ்கோப் மூலம் ஐசான் மாயாஜாலத்தைக் கண்டு களித்து வருகின்றனர்.

சின்ன பைனாகுலர் மூலம் பார்த்த விமானி

சின்ன பைனாகுலர் மூலம் பார்த்த விமானி

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரையன் விட்டாக்கர் என்ற விமானி, சிறிய ரக பைனாகுலர் மூலமாக ஐசானை கண்டு ரசித்ததாக கூறியுள்ளார்.

டிசம்பரில் அதிகாலையில் வெறும் கண்களால் பார்க்கலாம்

டிசம்பரில் அதிகாலையில் வெறும் கண்களால் பார்க்கலாம்

ஐசானை ரசிக்க விரும்புவோருக்கான ஆஃபர் இது.. டிசம்பர் மாதம் முழுவதும் அதிகாலையில் இந்த வால் நட்சத்திரத்தை வெறும் கண்களாலேயே காணலாம். மேலும் ஜனவரியில் இரவு நேரங்களில் இதைப் பார்க்கலாம்.

2012ல் கண்டுபிடிக்கப்பட்ட வால் நட்சத்திரம்

2012ல் கண்டுபிடிக்கப்பட்ட வால் நட்சத்திரம்

ஐசான் வால் நட்சத்திரம் 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷ்ய விண்வெளி வீரர்களான விட்டாலி நெவ்ஸ்கி, ஆர்ட்டிம் நோவேனோசோக் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள்தான் இந்த வால் நட்சத்திரத்திற்கு ஐசான் என்று பெயரிட்டனர்.

சரி .. ஐசான் என்றால் என்ன...?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+