ஜி20 மாநாடு: பிரேசில் அதிபர் பொல்சனாரூவை புறக்கணித்த தலைவர்கள்- கேள்வி கேட்ட ரிப்போர்ட்டருக்கு உதை!
ரோம்: இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கொரோனா கால சர்ச்சை நாயகனான பிரேசில் அதிபர் பொல்சனாரூ, உலக நாடுகளின் தலைவர்களால் புறக்கணிக்கப்பட்டு தனித்துவிடப்பட்டவராக வலம் வந்தார். இது தொடர்பாக கேள்வி எழுப்பிய பிரேசில் பத்திரிகையாளர்களை பொல்சனாரூ பாதுகாவலர்கள் தாக்கியதாக புதிய பஞ்சாயத்தும் கிளம்பியுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவமாடிய போது ஒவ்வொரு நாட்டின் தலைவரும் பேரதிர்ச்சியில் உறைந்துதான் போனார்கள். ஆனால் உலக நாடுகளிலேயே அப்படியான எந்த ஒரு கவலையும் கொள்ளாதவராக இருந்தவர் பிரேசில் அதிபர் பொல்சனாரூ.
கொரோனா தடுப்பூசி குறித்து பொல்சனாரூ பேசிய பேச்சுகள் உலக நாடுகளை அதிர்ச்சி அடையவும் வைத்தன. ஆனால் தமது நாட்டில் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கிவைத்த அவர், இதனால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு நான் பொறுப்பு அல்ல.. தடுப்பூசி போட்டுக் கொண்டு நீங்கள் முதலையாக மாறினாலும் மாறலாம் என்றார்.

பிரேசிலில் பேரழிவு
உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரேசிலில்தான் கொரோனா பேரழிவு அதிகம். கொரோனா மரணங்கள் பட்டியலில் பிரேசில் 2-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் இதைப்பற்றி எல்லாம் பொல்சனாரூ கவலைப்படவே இல்லை. கொரோனா தடுப்பூசிக்கும் எய்ட்ஸ் நோய்க்கும் தொடர்பு இருக்கிறது என்றெல்லாம் பொறுப்பற்ற முறையில் பேசி வந்தார்.

அதிபர் மீது விசாரணை
இதனால் கொந்தளித்து போன பிரேசில் மக்கள், பொல்சனாரூவுக்கு எதிராக வீதிகளில் போராடினர். முக கவசம் வேண்டாம்; தடுப்பூசி வேண்டாம் என்றெல்லாம் பொல்சனாரூ பேசிய பேச்சுகளை உலக சுகாதார அமைப்பு கண்டித்தது. பொறுமையை இழந்து போன பிரேசில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இப்போது பொல்சனாரூ மீது மக்களை இனப்படுகொலை செய்தது உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர். மேலும் பொல்சனாரூ மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பான தீர்மானம் பிரேசில் நாடாளுமன்றத்திலேயே நிறைவேற்றப்பட்டும் உள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பொல்சனாரூ
இந்த சூழ்நிலையில்தான் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பொல்சனாரூ பங்கேற்றார். ஆனால் இம்மாநாட்டில் சர்வதேச நாடுகளின் தலைவர் பொல்சனாரூவை கண்டுகொள்ளவே இல்லை. அந்த அளவுக்கு உலக நாடுகளின் வெறுப்பை சம்பாதித்திருக்கிறார் பொல்சனாரூ. ஜி20 நாடுகளின் தலைவர்கள் பலரும் ஒருவருக்கு ஒருவர் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் போது தனி மனிதராக பொல்சனாரூ மட்டும் நடமாடுவது; சாப்பிடுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகவும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஜி20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் கூட்டாக போட்டோ எடுத்துக் கொண்ட போது கூட பொல்சனாரூ அதில் இடம்பெறவும் இல்லை.

பத்திரிகையாளர் மீது தாக்குதல்
இது தொடர்பாக TV Globo என்ற பத்திரிகையின் செய்தியாளர் Leonardo Monteiro கேள்வி எழுப்பிய போது அவரை பொல்சனாரூவின் பாதுகாவலர்கள் கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அந்த பத்திரிகையாளரை தாக்கியது பிரேசில் அதிபரின் பாதுகாவலர்களா? இத்தாலிய பாதுகாப்பு படையினரா என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications