வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த திருடன்... இதுக்குப் பேர் தான் விதியா?
போலீசில் இருந்து தப்பிய திருடன் லிப்ட் கேட்டு மீண்டும் போலீசிடமே சிக்கிய சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.
பிராங்க்போர்ட்: போலீசாரிடம் இருந்து தப்பிய திருடன் ஒருவன், இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு போலீசிடமே லிப்ட் கேட்டு மாட்டிய விவகாரம் கெண்டுகியில் நடந்துள்ளது.
கெண்டுகியில் திருட்டு உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஆலன் லெவிஸ் என்ற நபர். சம்பவத்தன்று அவரை கிரீன் அப் தடுப்பு மையத்திற்கு மாற்றுவதற்காக போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது தனது கையில் உள்ள காப்பு மிகவும் இறுக்கமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் ஆலன்.

இதனால் அதனை சற்று தளர்த்திவிட முயற்சித்துள்ளார் காவலர். இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட ஆலன், அங்கிருந்து தப்பினார். அவரைப் போலீசார் துரத்தினர்.
அப்போது அந்த சாலையில் வந்த வாகனங்களில் லிப்ட் கேட்டுள்ளார் ஆலன். அதில் ஒரு வாகனம் மட்டும் இவருக்காக நின்றுள்ளது. ஆனால், அந்த வாகனத்தை ஓட்டி வந்ததும் ஒரு போலீஸ்தான் என்பது ஆலனுக்கு தெரியவில்லை. ஆலனின் கையில் இருந்த கைவிலங்கைப் பார்த்து சுதாரித்த அந்நபர், அவரை வளைத்துப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்ததால், தற்போது ஆலனின் தண்டனைக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications