அடுத்த தலைமுறைக்கு நல்ல உலகத்தை கொடுப்போம்! ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உதவிக்கரம் நீட்டும் டென்மார்க்!
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தொழில்நுட்பங்களில் டென்மார்க் உலகிற்கே முன்னோடியாக உள்ளது. எதிர்கால சந்தியினருக்கு பாதுகாப்பான உலகை வழங்க வேண்டும் என்பதற்காக, சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தனக்கு இருக்கும் நிபுணத்துவத்தை உலகின் மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவும், டென்மார்க் தயாராக உள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உதவ டென்மார்க் முன்வந்துள்ளது.
டென்மார்க் நாட்டின் வெளியுறவு துறையின், ஹெட் ஆஃப் மிஷன் மற்றும் கவுன்சல் ஜெனரலான லார்ஸ் ஸ்டீன் நீல்சன் சமீபத்தில் துபாயில் உரையாற்றினார். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் டென்மார்க் ஏற்கனவே நிபுணத்துவம் பெற்றதாக உள்ளது. நிலைத்தன்மை வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான தொழில்நுட்பங்களை கொண்ட சிறந்த நாடுகளில் ஒன்றாக டென்மார்க்கை ஐநா சபை பெருமிப்படுத்தியுள்ளது.

நிலைத்தன்மை என்பது, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை வேண்டாம் என ஒதுக்கி விடாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது ஆகும். வரும் 2030-ம் ஆண்டுக்குள் CO2 உமிழ்வை 70 சதவிகிதம் குறைக்கும் நோக்கத்துடன் டென்மார்க் செயல்பட்டு வருகிறது. அரசாங்கம், தனியார் தொழில் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த இலக்கை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் டென்மார்க்கின் முயற்சிகள், அதன் எல்லைக்குள் மட்டும் நின்று விடவில்லை. மற்ற நாடுகளுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. உலக அளவில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற டென்மார்க்கின் குறிக்கோளை இது வெளிக்காட்டுகிறது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் வலுவான உறவுகளை உருவாக்குவதில் டென்மார்க் ஆர்வமாக இருக்கிறது.
விவசாயம், உணவு பொருட்கள் வீண் ஆவதை குறைத்தல் மற்றும் பசுமை தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் போன்ற துறைகளில், தனது திறமையை ஐக்கிய அரபு அமீரகத்துடன் பகிர்ந்து கொள்ள டென்மார்க் அதிக ஆர்வம் காட்டுகிறது. இதன் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் சிறப்பான பொருளாதார உறவுகளையும் டென்மார்க் பேணி வருகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து டென்மார்க்கின் இறக்குமதி 714 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மதிப்பை எட்டியது. அதே நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான ஏற்றுமதி 2,541 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இந்த புள்ளிவிவரங்கள், டென்மார்க் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 2 நாடுகளுக்கு இடையேயான உறவுகள் சிறப்பாக இருப்பதை எடுத்து காட்டுகின்றன.
ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் வரவிருக்கும் தலைமுறைகளுக்கு பசுமையான எதிர்காலத்தை வழங்க வேண்டும். அதில் எங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என விரும்புகிறோம் என்று லார்ஸ் ஸ்டீன் நீல்சன் கூறியுள்ளார். ''டென்மார்க்கின் நோக்கம் தெளிவானது. உலகளவில் பசுமையான எதிர்காலத்திற்கான தேடலில் ஒரு கூட்டு சக்தியாக நாங்கள் இருக்க வேண்டும்'' என்பதே லார்ஸ் ஸ்டீன் நீல்சனின் கருத்தாக உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications