தள்ளி நிற்கும் இந்தியா! COP31 காலநிலை மாநாட்டில்.. முக்கிய இலக்கு! நிறைவேற்றுவதில் சிக்கல்?

Subscribe to Oneindia Tamil

அங்காரா: துருக்கியில் தற்போது COP31 காலநிலை மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 'மின்மயமாக்கல்' தொடர்பாக மிக முக்கியமான இலக்கு ஒன்று கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால், இதில் இந்தியா இணையாமல் தள்ளி நின்றது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

காலநிலை மாநாடு என்பது, உலகம் வெப்பமயமாவதை தடுக்கும் முயற்சியாகும். இந்த மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக சில தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும். இது தவிர சில நாடுகள் தனிப்பட்ட முறையில் இலக்குகளை முன்வைக்கும். அப்படித்தான் துருக்கி முக்கியமான இலக்கை முன்வைத்திருக்கிறது.

COP31

ஒவ்வொரு நாடும் 2035ம் ஆண்டுக்குள் 35% மின்மயமாக்கலை எட்டுவது என்பதுதான் இந்த இலக்கு. அதாவது பெட்ரோல், டீசல், CNG உள்ளிட்ட எரிபொருட்களால் இயங்கும் கார்களுக்கு பதில் முழுமையாக மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவது. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் டீசல் என்ஜின்களுக்கு பதில், மின்சார என்ஜின்களை பயன்படுத்துவது.. இப்படி எல்லாவற்றிலும் மின்சாரத்தை முதன்மைப்படுத்த வேண்டும்.

இந்தியாவை பொறுத்தவரை நாம் 19% வரை மின்மயமாக்கலை எட்டியுள்ளோம். வணிக ரீதியான எரிசக்தி பயன்பாட்டையும் சேர்த்துக்கொண்டால் இந்த அளவு 23% ஆக இருக்கும். இன்னும் 12% மின்மயமாக்கலை எட்ட வேண்டும்.

சரி 35% மின்மயமாக்கல் என்பது கேட்க நன்றாகத்தானே இருக்கிறது! பாசிட்டிவ் விஷயம்தானே! என்று தோன்றலாம். இதில் உண்மையில் சில சிக்கல்கள் இருக்கின்றன. முதல் சிக்கல் ஏற்கெனவே சொன்னதை போல.. இது அதிகாரப்பூர்வ தீர்மானம் கிடையாது. அதிகாரப்பூர்வமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது எனில், அதற்கான நிதி உள்ளிட்ட எல்லா விஷயங்களும் விவாதிக்கப்பட்டு அதற்கான தீர்வு எட்டப்படும். இது தனி ஒரு நாட்டின் தீர்மானம் என்பதால்.. நிதி விஷயங்களுக்கு பதில் இல்லை.

இன்னைக்கு வெறும் இலக்கு என்றுதான் சொல்வார்கள். பின்னர் வந்து.. இதை கட்டாயமாக பின்பற்றியே ஆகவேண்டும் என்று சொன்னால், நிதிக்கு எங்கு போவது? எனவே நாம் இதில் கையெழுத்து போடவில்லை. மட்டுமல்லாது அதிகாரப்பூர்வ தீர்மான்களில்.. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு உதவி செய்ய வேண்டும். ஆனால் இந்த தனி நாடு தீர்மானத்தில் அப்படி ஏதும் இல்லை.

மற்றபடி துருக்கி, ஆஸ்திரேலியா, பிரிட்டன், பின்லாந்து, பாகிஸ்தான் என மொத்தம் 14 நாடுகள் இதில் கையெழுத்து போட்டியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+