உலகம் அழியப்போகுது! கண் முன்னாடியே நடக்கும் சோகம்.. இதை செய்யலனா மொத்தமா காலி!

Subscribe to Oneindia Tamil

அங்காரா: துருக்கியில் தற்போது COP31 காலநிலை உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பேசிய உலக தலைவர்கள், உடனடியாக காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தாவிட்டால், நாம் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த உலகம்.. நம் கண் முன்னரே அழிந்துவிடும் என்று எச்சரித்துள்ளனர்.

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் நிலக்கரி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட புதைபடிம எரிபொருள் மூலமாக பூமி சூடாகிறது என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

COP31 Summit

அதுக்காக வண்டி ஓட்டாமயே இருக்க முடியுமா? அனல் மின் நிலையத்திலிருந்து வரும் மின்சாரத்தை வேண்டாம் என்று சொல்லிவிட முடியுமா? இதெல்லாம் முடியாது. உலக பொருளாதாரமே இந்த புதைபடிம எரிபொருளை நம்பித்தான் இருக்கிறது. இப்படி இருக்கையில், இதை வேண்டாம் என்று எப்படி சொல்ல முடியும்? எனவேதான், எவ்வளவு எரிபொருளை பயன்படுத்தினாலும்.. இப்போது இருக்கும் வெப்ப நிலையை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயர்த்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

பிரச்சனை என்னவெனில் நாம் போட்ட கோட்டை நாமே தாண்டிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான். இந்த 1.5 டிகிரி செல்சியஸ் கணக்கை நாம் தாண்ட தொடங்கிவிட்டோம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் பாதிப்புகள் வெளிப்படையாகவே தெரிய தொடங்கியிருக்கின்றன.

இந்த மாநாட்டில் பேசிய மார்ஷல் தீவுகள் அதிபர் ஹில்டா ஹெய்னின், "பாரிஸ் ஒப்பந்தத்தின் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரம்பை தாண்டுவது, கடல் அலைகளால் எங்கள் தீவின் கரைகள் அரிக்கப்படுவதற்கும், நகரங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் வெள்ளத்தில் மூழ்குவதற்கும் வழிவகுக்கும். எனது சொந்த தீவின் கடலுக்கு அடியில் ஜூலை மாதம் பிரகாசமாகவும், செழிப்பாகவும் இருந்த பவளப்பறைகள்.. சில மாதங்களிலேயே வெளிறிபோய் அழிந்துவிட்டன. இந்த கொடுமையை நான் நேரில் பார்த்தேன்.

புதியதாக தோண்டப்படும் ஒவ்வொரு எண்ணெய் கிணறும், வெட்டி எடுக்கப்படும் ஒவ்வொரு நிலக்கரியும் எங்கள் நாட்டின் எதிர்ககாலத்திற்கு அச்சுறுத்தல். புதிய எரிபொருள் வளங்களை கண்டறிவது கொண்டாடப்பட வேண்டிய விஷயமல்ல. அச்சப்பட வேண்டியது" என்று வேதனையுடன் பேசியிருக்கிறார்.

அதேபோல ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், "எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள், இதனால் ஏற்படும் பாதிப்புகளை மறைத்து தவறான, குழப்பும் வகையில் தகவல்களை வெளியிடுகின்றன. இதனால் காலநிலை பாதிப்பை மக்கள் புரிந்துக்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. போரினால் அந்நிறுவனங்கள் ஈட்டிய அபரிமிதமான லாபத்திற்கு கூடுதல் வரி விதித்து, பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவ வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல பார்படாஸ் பிரதமர், வடக்கு மாசிடோனியா அதிபர், ஸ்லோவேனியா அதிபர் உள்ளிட்டோரும் காலநிலை மாற்றம் குறித்த தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

மறுமபுறம் இந்த மாநாட்டில் சில முரண்பாடுகளும் இருந்தன. ஆஸ்திரேலியாவுடன் இணைந்து இந்த மாநாட்டை நடத்தும் துருக்கி அதிபர் எர்டோகன், காலநிலை மாற்றத்தை தடுக்க செயல்பட வேண்டும் என்று பேசியிருந்தார். ஆனால், சில நாட்களுக்கு முன்னர் துருக்கியில் புதியதாக 2 எண்ணெய் வயல்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அவர் கொண்டாடி தீர்த்தார். அதேபோல ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், தனது உரையில் புதைபடிவ எரிபொருட்களை பற்றி பேசாதது விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த மாநாட்டில் 91 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற போதிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கவில்லை. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோர் இந்த மாநாட்டை தவிர்த்துவிட்டு அயர்லாந்தில் நடைபெறும் AI மாநாட்டில் பங்கேற்க சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+