என்னங்க நடக்குது சீனாவில்.. ஒரே நாளில் இத்தனை ஆயிரம் கொரோனா கேஸ்களா? அதுமட்டும் இடிக்குதே!
பெய்ஜிங்: சீனாவில் திடீரென கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. உலக நாடுகளில் கொரோனா கேஸ்கள் குறைந்து வரும் நிலையில் சீனாவில் மட்டுமே திடீரென கேஸ்கள் உயர்ந்துள்ளது.
உலகம் முழுக்க கொரோனா கேஸ்கள் பெரிய அளவில் சரிந்துள்ளது. கடத்தி 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 414,468 கேஸ்கள் மட்டுமே பதிவாகி உள்ளது. ஓமிக்ரான் பரவல் காரணமாக உலக நாடுகள் முழுக்க கொரோனா கேஸ்கள் சரிந்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் உலகம் முழுக்க கேஸ்கள் குறைந்தாலும் சீனாவில் கேஸ்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளன.

சீனா கேஸ்கள்
சீனாவில் தினசரி கேஸ்கள் 100க்கும் கீழ் குறைவாக பதிவாகி வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து மீண்டும் கேஸ்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை 1369 கேஸ்கள் பதிவானது. அங்கு இருக்கும் வடகிழக்கு மாகாணமான சாங்சுன் பகுதியில் இந்த கேஸ்கள் பதிவானது. இதனால் மொத்தமாக சாங்சுன் மாகாணம் லாக்டவுன் செய்யப்பட்டது.

9 மில்லியன்
9 மில்லியன் மக்கள் வசிக்கும் மாகாணத்தை சீனா மொத்தமாக லாக் செய்தது. மக்கள் யாரும் வெளியே வர கூடாது. குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல கூடாது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஒரு வீட்டில் இருந்து ஒருவர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறைதான் வர வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அங்கு கொரோனா கேஸ்களுக்கான டெஸ்டிங் வீடு வீடாக செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2021 பிப்ரவரிக்கு பின் சீனாவில் ஒரே நாளில் 1000க்கும் அதிகமான கேஸ்கள் பதிவானது இதுவே முதல்முறை.

எத்தனை கேஸ்கள்
இந்த நிலையில்தான் சீனாவில் நாளில் கடந்த 24 மணி நேரத்தில் 3393 கேஸ்கள் பதிவாகி உள்ளது. கடந்த 2 வருடத்தில் சீனாவில் ஒரே நாளில் பதிவான கேஸ்கள் இதுதான். ஷாங்காய் மாகாணத்தில் இந்த கேஸ்கள் பதிவாகி உள்ளது. இது மட்டுமின்றி அங்கு இருக்கும் 10க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 100 என்ற அளவில் கேஸ்கள் பதிவாகி உள்ளதால் லோக்கல் லாக்டவுன் போடப்பட்டுள்ளது.

இது மட்டும் இடிக்குதே
சீனாவில் ஒரே நாளில் இவ்வளவு கேஸ்கள் பதிவானது எப்படி என்பதுதான் சந்தேகமாக உள்ளது. zero tolerance எனப்படும் கடுமையான லாக்டவுன் விதிகளை சீனா போட்டு இருந்தும் கூட அங்கு இத்தனை ஆயிரம் கேஸ்கள் பதிவானது எப்படி? உலகம் முழுக்க கொரோனா கேஸ்கள் குறையும் நிலையில் சீனாவில் எப்படி புதிய அலை தோன்றியது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை உலகம் முழுக்க புதிய அலை ஏற்படுவதற்கான அறிகுறியா இது என்றும் கேள்வி எழுந்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications