கட்டி அணைக்கவில்லை.. பின்னி பிணையவும் இல்லை.. சின்னதாக முத்தம்.. அந்த பக்கம் நீ.. இந்த பக்கம் நான்!
கண்ணாடி வழியே காதல் ஜோடி முத்தமிட்டுக் கொண்டது
Recommended Video
பெய்ஜிங்: இந்த காதலர்கள் பக்கம் பக்கமாக பேசவும் இல்லை.. வார்த்தைகளை கொட்டவும் இல்லை.. உடல்ரீதியாக பின்னிப் பிணையவும் இல்லை.. ஆனால் இவர்களின் காதலின் வலிமை மட்டும் ஆழமாக வெளிப்படுகிறது.. அந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களுக்கு எல்லாமே உயர்தர சிகிச்சைதான்.
இந்தசிகிச்சையை அளிப்பதற்காக ஏராளமான மருத்துவர்கள் தங்கள் சொந்த சுக-துக்கங்களை மறந்து ஈடுபட்டு வருகிறார்கள்.. தங்களது வீட்டுக்கு போக முடியாமல், ஆஸ்பத்திரியிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 மணி நேரமும் உணர்வுடன் சேவையாற்றி வருகின்றனர்.

நர்ஸ்கள்
குறிப்பாக நர்ஸ்கள்.. இவர்களின் சேவையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.. பெரும்பாலும் இளம் நர்ஸ்கள்தான்.. இந்த சின்ன வயதில் இவ்வளவு பொறுப்பும், அக்கறையும் சேவையும் இவர்களுக்கு வந்துள்ளது மகத்தான ஒன்று.. அதே நேரம் ஏராளமான ஆசாபாசங்களை மனசுக்குள்ளேயே வைத்து புதைத்து கொண்டுதான் இந்த சேவையில் இறங்கி உள்ளனர்.

காதலன்
ஹங்சூ நகரில் இப்படித்தான் ஒரு நர்ஸ் செயல்பட்டு வருகிறார்.. இவர் ரொம்ப நாளாக ஆஸ்பத்திரியிலேயே தங்கி உள்ள நர்ஸ்.. இவரை பார்க்க காதலன் ஆஸ்பத்திரிக்கு வருகிறார்.. ஆனால் கொரானாவின் பாதிப்பு காரணமாக அவர் தடுத்து நிறுத்தப்படுகிறார்.. ஆனாலும், ஆஸ்பத்திரி கண்ணாடி தடுப்பு வழியாக காதலியை பார்த்து விட்டு செல்லுமாறு அனுமதிக்கப்படுகிறார்.. கண்ணாடி வழியாக மட்டுமே அவர் காதலியை பார்க்க முடியும்.. ஆனால் பேச முடியாது..

கண்ணாடி
இருந்தாலும் காதலியை பார்த்தால் போதும் என்று சம்மதிக்கிறார்.. நர்ஸ் காதலியும் அங்கு வருகிறார்.. கண்ணாடிக்கு அந்த பக்கம் நர்ஸ்.. இந்த பக்கம் காதலன்.. இருவருமே முகத்தில் மாஸ்க் அணிந்துள்ளனர்.. காதலியை பார்த்துவிட்ட மகிழ்ச்சி அவர் கண்களிலும் தெரிகிறது.. காதலனை கண்டதும் நர்ஸ் கண்கள் கலங்குகின்றன.. எதுவுமே பேச வழியில்லாத அந்த சூழலில், அந்த கண்ணாடி தடுப்புகள் வழியே முத்தம் தந்து கொள்கிறார்கள்

வீரியம்
இந்த காட்சிதான் அனைவரையும் நெகிழ வைத்து வருகிறது.. வைரஸ் தாக்கத்தில் இருந்து சீனா மீண்டு வந்ததும் இந்த ஜோடி கல்யாணம் செய்து கொள்ள போகிறார்களாம்.. இத்தனை போராட்டங்களையும் கடந்து...கோரமான இந்த கொரோனாவின் வீரியத்தை இவர்களின் காதல் முறியடித்து விட வேண்டும் என்பதே நம் அனைவரது எண்ணமாக உள்ளது!
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications