அமெரிக்காவில் ஃபுளூ காய்ச்சலை விட உயிர் பலியை ஏற்படுத்திய கொரோனா.. டிரம்ப் போட்ட தப்புக் கணக்கு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஃபுளூ காய்ச்சலால் ஏற்பட்ட உயிர் பலியை விட கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,64,303 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இறப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இங்கு இறப்பு சதவீதம் என்பது 5 சதவீதத்தைவிட அதிகமாக உள்ளது.
இதுகுறித்து நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகையில் கடந்த 2018- 2019-ஆம் ஆண்டு இன்ப்ளூயன்சா எனப்படும் ஃபுளூ காய்ச்சல் அமெரிக்காவில் பரவியது. அப்போது 34,200 பேர் பலியாகிவிட்டனர்.

காய்ச்சல்
3 கோடி மக்களுக்கு இந்த காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இறப்பு விகிதம் என்பது 1 சதவீதமாகவே இருந்தது. ஆனால் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் இறப்பு விகிதத்தை ஃபுளூ காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்புகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ளது.

நினைத்து பாருங்கள்
கடந்த மார்ச் மாதம் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் கொரோனாவை விட ஃபுளூ வைரஸ் அதிகம் பேரை கொன்றதை நினைத்து பாருங்கள் என தெரிவித்திருந்தார். அத்துடன் லாக்டவுன் எல்லாம் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

546 பேர்
அந்த பதிவில், கடந்த ஆண்டு சாதாரண ஃபுளூ காய்ச்சலால் 37 ஆயிரம் அமெரிக்கர்கள் இறந்துவிட்டனர். அதாவது ஆண்டுக்கு 27 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரையாகும். எனவே லாக்டவுன் ஏதும் செய்ய தேவையில்லை. வர்த்தகங்கள் தொடரட்டும். தற்போதைய சூழலில் (மார்ச் 9) கொரோனா வைரஸால் 546 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர்.

உயிரிழப்பு
22 பேர் பலியாகிவிட்டனர். எனவே நினைத்து பாருங்கள் என தெரிவித்துள்ளார். டிரம்ப் போட்ட தப்புக் கணக்கால் தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. ஃபுளூ காய்ச்சலை விட கொரோனா வைரஸ் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிவை போட்ட டிரம்ப் அப்போதே லாக்டவுன், எல்லைகளை மூடியிருந்தால் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications