கொரோனா வைரஸுக்கு உலகம் முழுதும் இதுவரை 484,982,468 பேர் பாதிப்பு.. 6,155,826 பேர் பலி
கொரோனா பாதிப்பில் இந்தியா 2வது இடத்தில், பிரேசில் 3வது இடத்தில் உள்ளது
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.55 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் நாடுகள் தீவிரமாகி உள்ளன. எனினும், மக்கள் ஒரு பக்கம் பாதிப்புகள் அதிகமாகி கொண்டும், மறுபக்கம் நோயில் இருந்து குணமடைந்தும் வருகின்றர்.
உலகத்தையே கலக்கத்தில் ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது கொரோனா தொற்று.. இந்த 2 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.38 லட்சத்தை தாண்டிவிட்டது.
இந்த தொற்றானது, இதுவரை பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,155,826 பேரை தாக்கி கொன்றுள்ளது.. இன்றைய தினம், உலகம் முழுவதும் கொரோனாவால் 484,982,468 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 418,925,787 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 59,842,367 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குணமடைந்தனர்
கொரோனாவைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.. அந்த வகையில், உலக நாடுகள் அனைத்துமே தடுப்பூசிகளை கையில் எடுத்துள்ளன.. அமெரிக்காவில் 81,685,002 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 23,946 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,005,051 பேர் இதுவரை அமெரிக்காவில் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.. நேற்று ஒரே நாளில் மட்டும் 711 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதுவரை 64,872,142 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.கொரோனாவைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.. அந்த வகையில், உலக நாடுகள் அனைத்துமே தடுப்பூசிகளை கையில் எடுத்துள்ளன.. அமெரிக்காவில் 81,685,002 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 23,946 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,005,051 பேர் இதுவரை அமெரிக்காவில் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.. நேற்று மட்டும் ஒரே நாளில் 711 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதுவரை 64,872,142 பேர் தொற்றுக்கு குணமடைந்துள்ளனர்.

உயிரிழப்பு
அதேபோல நம் இந்தியாவை பொறுத்தவரை, மத்திய அரசு எத்தனையோ தடுப்பு மற்றும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து கொண்டுதான் வருகிறது.. 43,023,010 பேர் இதுவரை கொரோனாவைரஸ் தொற்றுக்கு நம் நாட்டில் பாதிப்படைந்துள்ளனர்.. 1,028 பேர் நேற்று மட்டும் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதுவரை 521,131 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேற்று மட்டும் தொற்றால் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதுவரை 42,485,534 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

தடுப்பூசி
கொரோனாவின் தீவிரத்தின் தாக்கத்தையும், அதன் வீரியம் மற்றும் பாதிப்பையும் குறைக்க தடுப்பூசி பாதுகாப்பாக கருதப்படுகிறது.. அந்த வகையில், இந்தியாவில் ஏற்கெனவே பல கோடிக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது... தற்போதும் அந்த பணி தொடர்ந்து நடந்து வருகிறது.. எனினும், கடந்த 4 மாத காலமாகவே, 15-18 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.. அதேபோல் சோதனைகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

நீடிப்பு
அப்போது முதலே தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், நம் இந்தியாவும் 2 இடத்திலேயே பாதிப்பில் தொடர்ந்து நீடித்து வருகிறது.. அதேபோல 3வதாக, பிரேசில் நாடு பாதிப்படைந்த நாடாக கருதப்படுகிறது.. இந்த நாட்டில் 29,882,397 பேர் இதுவரை அங்கு தொற்றுக்கு பாதிப்படைந்துள்ளனர்.. 30,056 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.. இதுவரை 659,294 பேர் அந்த நாட்டில் உயிரிழந்துள்ளனர்.. 282 பேர் நேற்று ஒரே நாளில் இறந்துள்ளனர்.. 28,618,511 பேர் இதுவரை குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர். அப்போது முதலே தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், நம் இந்தியாவும் 2 இடத்திலேயே பாதிப்பில் தொடர்ந்து நீடித்து வருகிறது.. அதேபோல 3வதாக, பிரேசில் நாடு பாதிப்படைந்த நாடாக கருதப்படுகிறது.. இந்த நாட்டில் 29,882,397 பேர் இதுவரை அங்கு தொற்றுக்கு பாதிப்படைந்துள்ளனர்.. 30,056 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.. இதுவரை 659,294 பேர் அந்த நாட்டில் உயிரிழந்துள்ளனர்.. 282 பேர் நேற்று ஒரே நாளில் இறந்துள்ளனர்.. 28,618,511 இதுவரை குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications