டெட்லி டே.. கருப்பு நாளாக அறிவித்த ஸ்பெயின்.. 3434 பேரை தொட்ட பலி எண்ணிக்கை.. சீனாவை முந்தியது!

Subscribe to Oneindia Tamil

மேட்ரிட்: கொரோனா காரணமாக ஏற்பட்ட பலி எண்ணிக்கையில் சீனாவை முந்தியது ஸ்பெயின். கொரோனாவால் ஸ்பெயினில் இதுவரை 3,434 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க அசுர வேகத்தில் பரவி வருகிறது. உலகம் முழுக்க மொத்தம் 158 நாடுகளை கொரோனா பாதித்து இருக்கிறது. சீனா, ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகளை கொரோனா அதிகம் பாதித்து இருக்கிறது.

உலகம் முழுக்க 18,957 பேரை கொரோனா வைரஸ் காவு வாங்கி உள்ளது. 425,959 இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 109,241 பேர் இதுவரை குணப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் இன்னும் வீட்டில்தான் தனிமையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

ஸ்பெயினில் நிலை என்ன

ஸ்பெயினில் நிலை என்ன

கொரோனாவால் ஸ்பெயினில் இதுவரை 3,434 பேர் பலியாகி உள்ளனர். 47,610 பேர் ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 5623 பேர் கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறார்கள். இன்று மட்டும் ஸ்பெயினில் 5552 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஸ்பெயினில் இன்று மட்டும் 443 பேர் பலியாகி உள்ளனர்.

தொடரும் பலி எண்ணிக்கை

தொடரும் பலி எண்ணிக்கை

ஸ்பெயினில் ஒரே நாளில் இத்தனை பேர் பலியாவது இது இரண்டாவது முறை. நேற்று அங்கு மொத்தம் 514 பேர் பலியானார்கள். தற்போது இரண்டாவது நாளாக தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஸ்பெயின் இதனால் இன்றைய நாளை டெட்லி டே என்று குறிப்பிட்டுள்ளது. அங்கு இன்றைய தினம் கருப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

மொத்தமாக பலியானார்கள் எண்ணிக்கை

மொத்தமாக பலியானார்கள் எண்ணிக்கை

இதன் மூலம் கொரோனாவால் பலியானார்கள் எண்ணிக்கையில் சீனாவை ஸ்பெயின் முந்தி இருக்கிறது. சீனாவில் இன்று 47 பேருக்கு மட்டுமே கொரோனா ஏற்பட்டது. சீனாவில் இதுவரை 81,218 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இதுவரை 3,281 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியை விட தற்போது ஸ்பெயினில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

இரண்டாம் இடம் பிடித்தது

இரண்டாம் இடம் பிடித்தது

இத்தாலியில் 69,176 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 6820 பேர் இதனால் பலியாகி உள்ளனர். இத்தாலியின் வேகத்தை விட தற்போது ஸ்பெயின் நாட்டில் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. ஸ்பெயின் இதே வேகத்தில் சென்றால் இன்னும் ஒரே வாரத்தில் இத்தாலியை முந்திவிடும் என்று கூறுகிறார்கள். அங்கு கொரோனாவை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் அந்நாட்டு அரசு குழம்பி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+