ஒரே புழுக்கம்.. டூ பீஸில் வந்த நர்ஸ்.. ஸீத்ரூ கவச உடையுடன் பணியாற்றியதால் பரபரப்பு.. ரஷ்யாவில்!
ரஷ்யாவில் கொரோனா வார்டுக்குள் பிகினி உடையில் நுழைந்தார் நர்ஸ்
மாஸ்கோ: கொரோனாவிடம் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் ரஷ்யாவில் ஒரு நூதன சம்பவம் நடந்துள்ளது. அதாவது நர்ஸ் ஒருவர் தான் அணிய வேண்டிய பாதுகாப்பு கவச உடையை பிகினி ஸ்டைலில் அணிந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஆகி வடி்டது. அவரை தற்போது சஸ்பெண்ட் செய்துள்ளனராம்.
இந்த புகைப்படமும் இப்போது வைரலாகியுள்ளது. அந்த நர்ஸ் யார் என்ன என்ற விவரம் தெரியவில்லை. உடலுக்குள் மேலும் கீழும் மட்டுமே அவர் உள்ளாடை அணிந்துள்ளார். அந்த இரண்டும் அப்பட்டமாக வெளியில் தெரிவது போல ஒரு ஸீத்ரூ உடையை போட்டுக் கொண்டு வார்டில் பணியாற்றினார்.
இந்த காட்சி வைரலானதும் அந்த மருத்துவமனை நிர்வாகம் நர்ஸைக் கூப்பிட்டு இப்படியா வருவது என்று கண்டித்துள்ளனர்.. ஆனால் தான் தவறு செய்யவில்லை என்றும், இந்த ஸீத்ரூ உடையும் பாதுகாப்பு கவச உடைதான் என்றும் விளக்கியுள்ளார் அந்த நர்ஸ். இருந்தாலும் அவரது விளக்கத்தை மருத்துவமனை நிர்வாகம் ஏற்கவில்லையாம்.

மாஸ்கோவின் தெற்கில் உள்ளது துலா என்ற பிராந்தியம். இங்குதான் இந்த நர்ஸ் ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்த உடையுடன் அவர் நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பது போன்ற தனது பணிகளிலும் அக்கறையுடன் ஈடுபட்டுள்ளார். இந்த உடையை நர்ஸ் தேர்ந்தெடுத்ததிலும் ஒரு நியாயமான காரணம் இருக்க்ததான் செய்கிறது.

அதாவது இந்த பிபிஇ எனப்படும் பாதுகாப்பு கவச உடையை போட்டுக் கொண்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க முடியாது. அதிகமாக தண்ணீர் குடிக்க முடியாது. வியர்த்துக் கொட்டி எடுக்கும். மிகவும் அசவுகரியமான உடை இது. இப்படி கடும் சிரமத்துக்கு மத்தியில்தான் டாக்டர்களும், நர்ஸுகளும் நமக்காக பாடுபட்டுக் கொண்டுள்ளனர். இதே காரணத்தால்தான் இந்த நர்ஸும் ஸீத்ரூ உடைக்கு மாறியுள்ளார்.
இந்த நர்ஸ் பணியாற்றி வரும் மருத்துவமனையானது கொரோனாவைரஸ் ஹாட்ஸ்பாட்டுக்குள் வருகிறது. இந்த நர்ஸின் உடைக்கு நோயாளிகள் யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லையாம். ஒரு நோயாளி மூலம்தான் இந்த புகைப்படம் வெளியில் பரவியதாகவும் சொல்கிறார்கள். இருப்பினும் டிரஸ் கோடை மீறி விட்டதாக கூறி அந்த நர்ஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.
Recommended Video
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications