டீம் அவுட்டிங், போனஸ்: கார்பரேட் நிறுவனங்களை போல் செயல்படும் தீவிரவாத அமைப்புகள்
இஸ்லாமாபாத்: தீவிரவாத அமைப்புகளும் கார்பரேட் நிறுவனங்கள் போன்று உறுப்பினர்களை மகிழ்ச்சியாக வைக்க அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி வருகின்றன.
அல் கொய்தா, இந்தியன் முஜாஹிதீன், ஐஎஸ்ஐஎஸ் ஆகிய தீவிரவாத அமைப்புகள் தங்களின் உறுப்பினர்களுக்கு பல சலுகைகளை அளித்து அவர்களை மகிழ்ச்சி படுத்துகின்றன. தீவிரவாத அமைப்புகள் கூட கார்பரேட் நிறுவனங்கள் போல் நடந்து கொள்கின்றன. தற்கொலைப் படை தீவிரவாதியாக விரும்புகிறீர்களா, அப்படி என்றால் விண்ணப்பியுங்கள் என்று அல் கொய்தா தெரிவித்திருந்தது அப்போத்தாபாத்தில் உள்ள ஒசாமா பின் லேடன் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரிய வந்தது.
கார்பரேட் நிறுவனங்கள் போன்று விண்ணப்பிக்குமாறு கூறியுள்ளது அல் கொய்தா.

இந்தியன் முஜாஹிதீன்
மும்பையில் 13/7 தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்த உறுப்பினர்களுக்கு இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு பரிசு கொடுத்து பாராட்டியது. 13/7 தாக்குதல் தான் இந்தியன் முஜாஹிதீன் நடத்திய தாக்குதல்களில் மிகவும் வெற்றிகரமானது.

கேரளா
13/7 தாக்குதலை நடத்திய யாசின் பட்கலும், அசாதுல்லா அக்தரும் ஒருவரையொருவர் பாராட்டினர். இதையடுத்து சிறப்பாக செயல்பட்ட அவர்கள் இருவரும் கேரளாவில் உள்ள மூணாறில் ஒருவாரம் ஓய்வு எடுக்க அனுப்பி வைத்தார் அமைப்பின் தலைவர் ரியாஸ் பட்கல்.

ஐஎஸ்ஐஎஸ்
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு என்னவென்றால் இளம் உறுப்பினர்களுக்கு இலவச தேனிலவு, குடும்பம் நடத்தத் தேவையான பணம், குழந்தைகளுக்கு ஆகும் செலவை ஏற்றுக் கொள்கிறது. இதனால் அந்த அமைப்பில் சேர்ந்தால் வாழ்க்கையில் பிரச்சனை இல்லை என்று வாலிபர்கள் கருதுகிறார்கள்.

ஒசாமா
அப்போத்தாபாத்தில் ஒசாமா பின் லேடன் தங்கியிருந்த வீட்டில் அல் கொய்தா அமைப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இருந்தது. தீவிரவாத அமைப்புகள் கூட கார்பரேட் நிறுவனங்கள் போன்று விண்ணப்பங்கள் வழங்குகின்றன. ஒசாமா வீட்டில் இருந்து கிடைத்த விண்ணப்பத்தில் ரத்த வகை, வருவாய் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தீவிரவாத அமைப்புகள்
தீவிரவாத அமைப்புகள் புதிதாக பலரை வேலைக்கு எடுக்க முயற்சித்து வருகின்றன. கலவரப் பகுதிகளில் ஆட்களை தேர்வு செய்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. பெரிய கார்பரரேட் நிறுவனங்கள் போன்று தீவிரவாத அமைப்புகள் ஆன்லைனில் விண்ணப்பம் அளித்து ஆட்களை தேர்வு செய்கின்றன.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications