அமெரிக்காவில் அதிசய தம்பதிகள்... மனைவி இறந்த 20 நிமிடத்தில் கணவரும் மரணம் - கடிகாரமும் நின்றது
நியூயார்க்: அமெரிக்காவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காதல் மனைவி இறந்த 20 நிமிடங்களில் கணவரும் அதே இடத்தில் உயிரிழந்த நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அவர்கள் சிகிச்சை பெற்றுவந்த அறையில் இருந்த கடிகாரமும் காதல் தம்பதியினருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நின்று போனதுதான் ஆச்சரியம்.
கணவன் மனைவி இடையேயான திருமண பந்தம் இந்தியாவில் அதிகம் போற்றப்படுகிறது. ஒரு பக்கம் விவாகரத்துகள் நிகழ்ந்தாலும் தம்பதிகளிடையேயான ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை அதிகம் கடைபிடிக்கப்படுவது இந்தியாவில்தான்.
வெளிநாடுகளில் எல்லாம் திருமண பந்தத்திற்கு மதிப்பு இருக்காது என்றும் ஆடையை மாற்றுவது போல கணவனையோ மனைவியையோ மாற்றுவார்கள் என்றும் கூறுவதுண்டு.

அமெரிக்க தம்பதிகள்
அது பொய் என்று நிரூபித்துள்ளது அமெரிக்காவில் நிகழ்ந்த ஒரு சம்பவம். உடல்நலக்குறைவால் மனைவி இறந்த அடுத்த 20 நிமிடங்களில் கணவரும் அதே இடத்தில் உயிரிழந்த நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

மறதி நோய் தாக்கியது
அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி மற்றும் ஜேனட் தம்பதிகளுக்கு திருமணமாகி 63 வருடங்கள் ஆகின்றன.கடந்த சில வருடங்களாக மறதி நோயால் அவதிப்பட்டு வந்த ஜேனட், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தார்.

கணவரும் பாதிப்பு
தனது மனைவியை தினந்தோறும் மருத்துவமனையில் சென்று பார்ப்பதை 86 வயதான ஹென்றி வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹென்றி, தனது மனைவி இருக்கும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நெருங்கிய மரணம்
மருத்துவமனையில் இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை 31ம் தேதி தம்பதிகள் இருவருக்கும் உடல்நிலை மோசமடைந்தது.
இருவரும் மரணம்
மனைவிக்கு அந்திமக்காலம் நெருங்குவதை உணர்ந்தாத் கணவர் ஹென்றி. நினைத்தது போலவே சிகிச்சை பலனளிக்காமல் அன்று அதிகாலை 5.10 மணியளவில் ஜேனட் மரணமடைந்தார். அவரை தொடர்ந்து 20 நிமிடங்கள் கழித்து ஹென்றியும் உயிரும் பிரிந்தது.

கடிகாரம் நின்றது
இருவரும் சிகிச்சை பெற்று வந்த அறையில் இருந்த கடிகாரம் ஹென்றி இறந்த நேரமான 5.30 மணிக்கு மேல் ஓடாமல் அப்படியே நின்றுவிட்டதாக அவருடைய மகன் தெரிவித்தார்.
63 வருட தாம்பத்திய வாழ்க்கையில் இணைபிரியாத கணவன்,மனைவியாக இருந்த ஹென்றி-ஜேனட் தம்பதியினர் மரணத்திலும் இணைபிரியாமல் ஒன்றாகவே மேல் உலகத்திற்கு சென்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications