திருமணம் செய்ய க்யூ.... 11/12/13 அபூர்வ தினமாம்!
நியூயார்க்: நாள், மாதம், வருடம் மூன்றும் ஒரேநாளில் வந்தால் அது அபூர்வ நாளாக கருதப்படும்.
இந்த நாட்களில் திருமணம் செய்யவும், குழந்தை பெற்றுக் கொள்ளவும் ஆர்வம் காட்டுவார்கள்.
ஜனவரி 1 தொடங்கி டிசம்பர் 12 வரை நாளும், மாதமும் ஆண்டும் ஒரே எண்ணில் வந்து முடிந்துவிட்டது. இந்த ஆண்டு 2013 என்பதால் தற்போது புதிய எண்ணை கண்டுபிடித்து கொண்டாட முடிவு செய்து விட்டனர்.

அரிய தினங்கள்
01/01/01 தொடங்கி 12/12/12 வரை அபூர்வ தினங்கள் கொண்டாடப்பட்டன. இதற்காக ஹோட்டல்களில் கொண்டாட்டம், திருமண மண்டபங்களில் புக்கிங் என களை கட்டியது.

உலகம் அழிஞ்சிருமோ?
அதேபோல கடந்த ஆண்டு டிசம்பர் 21, 2012ல் உலகம் அழிந்துவிடுமோ என்று கூட அஞ்சிக்கிடந்தனர் மக்கள்.

டிசம்பர் 11, 2013
இந்த ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதியும்- அதாவது மாதம், தேதி, வருடம் என்ற வரிசையில் வைத்தால் 11-12-13 என்று வரும். அதேபோல, டிசம்பர் மாதம் 11ம் தேதியும் (11/12/13) இந்த ஆண்டுக்கு அபூர்வ தினங்களாக கூறப்படுகிறது.

100 ஆண்டுக்கு ஒருமுறை
இந்த அரிய நாள் 100 ஆண்டுகளுக்கு ஒரு தடவை வரும் அந்த அபூர்வ நாளாக இது கருதப்படுகிறது. இந்த நாளை அதிர்ஷ்ட நாளாக இளைஞர்களும், இளம் பெண்களும் கருதுகின்றனர். அதை தங்களின் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக விரும்புகின்றனர்.

திருமணத்திற்குத் தயார்
இந்த அபூர்வ நாளில் தங்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளில் 2,265 ஜோடிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தகவலை அமெரிக்காவை சேர்ந்த தனியார் திருமண ஏற்பாட்டாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிக ஆர்வம்
இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் வருகிற நவம்பர் 12-ந்தேதி அல்லது டிசம்பர் 11-ந்தேதி திருமணம் செய்ய பெரும்பாலான ஜோடிகள் ஆர்வமாக இருப்பது தெரிய வந்தது. இது கடந்த 2012-ம் ஆண்டில் அன்றைய கால கட்டத்தில் நடந்த திருமணத்தைவிட 72.2 சதவீதம் அதிகம் என கணக்கிட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்கு
இது ஒருபுறம் இருக்க அடுத்த ஆண்டு அதாவது 2014ல் அபூர்வ தினமான டிசம்பர் 13,2014 அபூர்வ தினத்திற்கு இப்போதிருந்த புக்கிங் ஆரம்பித்துவிட்டது.
எப்படி எல்லாம் பணம் பண்றாங்கப்பா?
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications