கடலில் விழுந்த ஏர்ஏசியா விமான கருப்பு பெட்டி சிக்னல் கண்டுபிடிப்பு
ஜகர்தா: ஜாவா கடலில் விழுந்து மூழ்கிய ஏர்ஏசியா விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து சிக்னல் வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று இந்தோனேசிய ராணுவ கமாண்டர் மோயல்டோகோ தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 28ம் தேதி இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூர் கிளம்பிய ஏர்ஏசியா விமானம் க்யூஇசட்8501 ஜாவா கடலில் விழுந்து மூழ்கியது. ஜாவா கடலில் விமான பாகங்கள் மற்றும் பயணிகளின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 47 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் விமானத்தின் வால் பகுதி உள்ளிட்ட பல்வேறு பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் வால் பகுதி கண்டெடுக்கப்பட்ட அன்றே கருப்பு பெட்டி விரைவில் கிடைத்துவிடும் என்று மீட்பு குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர். இந்நிலையில் வால் பகுதி கிடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் கருப்பு பெட்டியில் இருந்து வரும் சிக்னல் கிடைத்துள்ளது. சிக்னல் வந்த இடத்தில் மீட்புக் குழுவினர் கருப்பு பெட்டியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று ராணு கமாண்டர் மோயல்டோகோ தெரிவித்துள்ளார்.
கருப்பு பெட்டி பற்றிய மோயல்டோகோவின் அறிவிப்பை உறுதிபடுத்த தேடல் பணியில் ஈடுபட்டுள்ள பசர்னஸ் நிறுவன தலைவர் பாம்பாங் சோயலிஸ்டோ மறுத்துவிட்டார்.
இன்று வானிலை நல்லபடியாக இருப்பதால் தேடல் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல பயணிகளின் உடல்கள் விமானத்தின் பாகங்களில் சிக்கியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications