நாம குஷ்புவுக்கு கோயில் கட்டுன மாதிரி... பாப் பாடகி பியான்ஸிக்கு அமெரிக்காவுல சர்ச் கட்டுறாங்க!
வாஷிங்டன்: நம்மூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டியது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அந்தவகையில், தற்போது அமெரிக்காவில் பாப் பாடகி பியான்ஸிக்காக அவரது ரசிகைகள் சர்ச் கட்ட உள்ளதாக அறிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
பிரபல பாப் பாடகியான பியான்ஸிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஆனால், அவருக்காக சர்ச் கட்டும் பணியில் ஈடுபட்டிருப்பது பெண் ரசிகைகள் தான் என்பது ஆச்சர்யமான உண்மை.
முதலில் இத்தகவலை விளையாட்டாக எடுத்துக் கொண்டது ஊடக உலகம். ஆனால், தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட பிற நடவடிக்கைகளால் தற்போது அவர்களைக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.

சர்ச் கட்டப் போறோம்...
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள அட்லாண்டா நகரத்தில் தான் 12 பெண் ரசிகைகள் சேர்ந்து தங்களது அபிமான பாப் பாடகி பியான்ஸிக்கு சர்ச் கட்ட முடிவெடுத்துள்ளனர்.

இடம் தேர்வு...
முதலில் அவர்கள், ‘பியான்ஸி உருவில் தேவ மாதா பிறந்திருக்கிறார்' என்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டனர். பின்னர் ஒரே வாரத்தில் சர்ச் கட்டுவதற்கான இடத்தைத் தேர்வு செய்து தங்களது இணையதளத்தில் புகைப்படம் வெளியிட்டனர்.

போர்க்கொடி...
அமெரிக்க டாலர் நோட்டில் கடவுளை நம்புகிறோம் என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும். ஆனால், அந்த நாட்டில் இவ்வாறு கடவுளை நிந்திப்பதை ஏற்றுக் கொள்ளாத மக்கள் இதற்கு எதிராக போர்க் கொடி உயர்த்தினர்.

எங்கள் உரிமை...
ஆனால், ரசிகைகள் இதற்கெல்லாம் அசருவதாய் இல்லை. நாங்கள் யாரை வழிபட வேண்டும் என்பது எங்களது உரிமை என பதிலளிக்கிறார்கள் அவர்கள்.

உயிர் பியான்ஸிக்கு...
சர்ச் கட்டும் திட்டத்தைத் தொடங்கிய சில தினங்களிலேயே டானியா ஹேட்டர்பீல்ட் என்ற ரசிகை, தனது உயிரை பியான்ஸிக்கு அர்ப்பணிப்பதாகக் கூறி தற்கொலை செய்து கொண்டார்.

புனிதர் பட்டம்...
உடனடியாக தற்கொலை செய்து கொண்ட அந்த ரசிகைக்கு சர்ச் ஆப் பியான்ஸியின் சார்பில் புனிதர் பட்டம் வழங்கப் பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு உயிரிழந்த ரசிகையின் குடும்பத்தாருக்கும் நேரில் அழைப்பு தரப்பட, அழைக்கப் போனவர்களுக்கு செமத்தியாக அடி கிடைத்துள்ளது.

பேயிசம்...
இப்போது அடுத்த கட்டமாக தங்களது இந்தப் புதிய மதத்திற்கு பியான்ஸியின் செல்லப் பெயரான ‘பே' என்பதைக் கொண்டு ‘பேயிசம்' எனப் பெயர் சூட்டியுள்ளனராம். மேலும், பியான்ஸியின் பாடல் வரிகளைக் கொண்டு ‘பேபிள்' என்கிற புனித நூலையும் இவர்கள் வெளியிட்டுள்ளனராம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications