தன்னால் கோமாவில் இருந்து மீண்டு வந்த சிறுவனை சந்தித்த ரொனால்டோ !
வர்ஸா: தான் கோல் அடிக்கும் கமென்ட்ரியை கேட்டுக் கேட்டு, கோமாவில் இருந்த சிறுவன் சுய நினைவுக்கு திரும்பியதை பார்த்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
போலந்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் டேவிட் பவ்லேக்ஸிக். கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த டேவிட் கோமா நிலைக்குச் சென்றார். மூன்று மாதங்களாக கோமாவில் இருந்தார். கோமாவில் உள்ளவர்களிடம் அவர்களின் பழைய நினைவுகளை கொண்டு வர முயற்சிப்பது உண்டு.

தங்கள் மகன் ரியல் மாட்ரிட் அணியின் தீவிர ரசிகன் என்பதை அறிந்த அவனது பெற்றோர், அணியின் லோகா பொருந்திய படுக்கை விரிப்புகளையே மருத்துவமனையில் பயன்படுத்தினர். மேலும், ரியல் மாட்ரிட் அணி பங்கேற்கும் ஆட்டங்களை "ஹெட்போன்' மூலம் கேட்க வைத்தனர். ரியல் மாட்ரிட் அணியின் ரொனால்டோ கோல் அடித்த சமயத்தில் சிறுவன் டேவிட் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டார். இதை மீண்டும் மீண்டும் கேட்க வைத்தனர்.
இதுகுறித்து போலந்தில் உள்ள பத்திரிகையில் செய்தி வெளியானது. தகவல் அறிந்த ரொனால்டோ, அந்த சிறுவனுக்கு அழைப்பு விடுத்தார். 2014 ஆம் ஆண்டு மாட்ரிட் நகரில் நடந்த ஐரோப்ப கால்பந்து சாம்பியன்ஷிப் காலிறுதி முதல் சுற்று ஆட்டத்தைக் காண வந்தார் டேவிட். அதன்படி ரியல் மாட்ரிட் - டார்ட்மண்ட் அணிகள் மோதிய ஆட்டத்தைப் பார்க்க வந்த டேவிட் ஒரு சிறப்பு விருந்தினர் போல நடத்தப்பட்டார்.
ஆட்டம் முடிந்த பின் டேவிட்டை சந்தித்துப் பேசினார் ரொனால்டோ. மேலும், அன்றைய ஆட்டத்தில் தான் அணிந்திருந்த சீருடையையும் அந்த சிறுவனுக்கு பரிசளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட அந்த சிறுவன், அதை ஃபிரேம் செய்து தன் வீட்டில் பத்திரப்படுத்தி வைக்கப்போவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அந்த சிறுவன் தனது குடும்பத்தினருடன் ரொனால்டோவை சந்தித்தார். போலந்து நாட்டின் வார்ஸா நகரில் நேற்று சாம்பியன்ஸ் லீக் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த ரொனால்டோவை சந்திக்க அனுமதி வாங்கியிருந்தனர் டேவிட் பெற்றோர்.
🇵🇱📸😀@Cristiano greets David Pawlaczyc.
— Real Madrid C.F. (@realmadriden) November 2, 2016
👉 https://t.co/1G9FMEHXGJ#RealMadrid pic.twitter.com/OqT6E5qLcm
போட்டி தொடங்குவதற்கு முன்பு ரொனால்டோ அந்த சிறுவனை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். டேவிட் கொண்டு வந்திருந்த புத்தகம், ஜெர்ஸியில் கையெழுத்துப் போட்ட ரொனால்டோ, டேவிட்டின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். டேவிட் இப்போது ஆரோக்கியமாக இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருப்பதாக ரொனால்டோ கூறினார். இந்த வீடியோவை ரியல் மாட்ரிட் கிளப் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications