ரொனால்டோவின் உறவை "உதைத்து"த் தள்ளினார் காதலி இரினா!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் காதலி இரினா ஷாயக், ரொனால்டோவை விட்டு நிந்தரமாக பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
இவர் இரினா ஷாயக் என்ற 29 வயது மாடல் அழகியை காதலித்து வந்தார். தனக்கு ரொனால்டோ துரோகம் செய்ததால் இரினா அவரை விட்டுப் பிரிந்துள்ளாராம்.

5 வருடமாக காதலித்து விட்டு:
இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்தனர். பல நாடுகளுக்கும் சென்று ஜாலியாக பொழுதை கழித்தனர். எனவே இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

காதல் முறிவாம்:
இதற்கிடையே கடந்த ஓராண்டாக அவர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் காதலி இரினா தனது காதலை முறித்து கொண்டு ரொனால்டோவை விட்டு பிரிந்து விட்டார்.

பெண்களுடன் தொடர்பு:
இவர்கள் இருவரும் தீவிரமாக காதலித்தபோது இரினாவின் செல்போனுக்கு பல பெண்கள் செய்தி அனுப்பினர். அதில் ரொனால்டோவுக்கு தங்களுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.

உறுதியான தகவல்:
அதைத்தொடர்ந்து ரொனால்டோவின் செல்போனை இரினா சோதனை செய்தபோது அந்த தகவல் உறுதியானது. அதைத் தொடர்ந்து இரினா தனது காதலர் ரொனால்டோவை நிரந்தரமாக பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தாயாரின் பிறந்தநாள்:
இந்நிலையில் அவர்கள் பிரிவிற்கு காரணம் இரினா, ரொனால்டோவின் தாயாரின் 60வது பிறந்தநாளுக்கு செல்லாததுதான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த காதல்:
ரொனால்டோவை உதைத்துத் தள்ளிய கையோடு தற்போது ஹாலிவுட் நடிகர் பிரட்லி ஹுப்பருடன் இரினா சுற்றி திரிவதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications