மேடையிலேயே இப்படியா? ஜெர்மனி பெண் அமைச்சருக்கு முத்தமிட முயன்ற குரேஷியா அமைச்சர்.. பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

பெர்லின்: ஜெர்மனி தலைநகர் பெர்லினின் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற குரேஷியா வெளியுறவுத்துறை அமைச்சர் கார்டன் கிர்லிக் ராட்மேன், ஜெர்மனியின் பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னாலெனா பேர்பாக்கை மேடையிலேயே முத்தமிட முயன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஐரோப்பிய யூனியனில் பல நாடுகள் உள்ளன. அவ்வப்போது ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஒன்றிணைந்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன.

Croatian Foreign Minister Gordon Grlic Radman trying to kiss Germany Minister Annalena Baerbock

அந்த வகையில் ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரில் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த மாநாட்டுக்கு ஐரோப்ப யூனியனை சேர்ந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். மாநாட்டுக்கு வந்தவர்களை ஜெர்மனி வெளியுறவுத்துறை பெண் அமைச்சர் அன்னாலெனா பேர்போக் வரவேற்றார். அதன்பிறகு அவர்கள் அனைவரும் ஒன்றாக நின்று மேடையில் புகைப்படம் எடுத்து கொள்ள முயன்றனர்.

இந்த வேளையில் குரேஷியா நாட்டின் 65 வயது நிரம்பிய வெளியுறவுத்துறை அமைச்சர் கோர்டன் கிர்லிக் ராட்மேன் முகம் சுளிக்கும் வகையிலான செயலை செய்தார். அதாவது அவரை வரேவற்ற ஜெர்மனி பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னாலெனா பேர்போக்கினிடம் கைக்குலுக்கியதோடு, கன்னத்தில் திடீரென முத்தமிட முயன்றார். இதனால் அன்னாலெனா பேர்போக் அதிர்ச்சியடைந்து விலகினார்.

இந்த சம்பவத்தால் அன்னாலெனா பேர்போக் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெண் ஆர்வலர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதுபற்றி குரேஷியா வெளியுறவுத்துறை அமைச்சர் கோர்டன் கிர்லிக் ராட்மேன் கூறுகையில், ‛‛சக ஊழியரிடம் அன்பான முறையில் தான் நடந்து கொண்டேன். இதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்னவென்று தெரியவில்லை'' என்றார். இதற்கு குரோஷிய பெண் உரிமை ஆர்வலர் ராடா போரிக் கூறுகையில், ‛‛கோர்டன் கிர்லிக் ராட்மேன் நடத்தை என்பது மிகவும் பொருத்தமற்றதாக உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது'' என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+