மனைவி கண் முன்பாக கணவரை கடித்துத் தின்ற "மைக்கேல் ஜாக்சன்" சுட்டுக் கொலை!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் மனைவி கண் எதிரேயே கணவரைக் கடித்துத் தின்ற ‘மைக்கேல் ஜாக்சன்' என்ற முதலையை வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர்.
ஆஸ்திரேலியாவிலுள்ள டார்வின் நகரிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ளது அடிலேட் ஆறு. சம்பவத்தன்று இந்த ஆற்றின் கரையோரம் வயதான தம்பதி ஒன்று மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.
கணவர் தூண்டிலை வீசிக் கொண்டிருந்த போது எதிர்பாராமல் முதலை ஒன்றிடம் அகப்பட்டுக் கொண்டார்.

முதியவர் பலி...
கணவரை முதலைத் தாக்குவதைக் கண்டு பதறிய மனைவி உதவி கேட்டு கத்தியுள்ளார். ஆனால், வனத்துறையினர் மற்றும் போலீசார் வருவதற்கு முன்னதாக அந்த முதலை முதியவரை கொன்று இழுத்துச் சென்று விட்டது.

சுட்டுக் கொலை...
பின்னர், நீண்ட தேடுதலுக்குப் பின்னர் வனத்துறையினர் அந்த முதலையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

மைக்கேல் ஜாக்சன்...
அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அம்முதலையின் பெயர் மைக்கேல் ஜாக்சன் என தெரிய வந்தது. இப்படி பெயர் வந்ததற்குக் காரணம் அது அரைகுறை அல்பினோ ரக முதலையாகும். ஜாக்சனும் கூட தனது கருப்பு நிறத்தை மாற்ற ஊசி போட்டு பல சிகிச்சைகளை எடுத்துக் கொண்டதால் பாதி வெள்ளையாகவும், பாதி கருப்பாகவும் மாறிப் போனதால் இப்படிப் பெயர் வைத்துள்ளனர்.

கோழிக்கு ஆசைப்பட்டு...
மேலும், ஆற்றில் படகில் செல்வோர் வீசும் கோழித் துண்டுகளுக்கு ஆசைப்பட்டு அவ்வப்போது இவ்வாறு முதலைகள் கரையருகே வருவதுண்டு எனக் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications